இளைஞர்கள் என்ன மாதிரி டெஸ்ட் பிளேயராகி .. வாழ்க்கைய கெடுத்துகாம இதை செய்ங்க.. புஜாரா அட்வைஸ்

C Pujara 255
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் செட்டேஸ்வர் புஜாரா அனைத்து விதமான போட்டிகளிலும் ஓய்வு பெற்றுள்ளார். 2010 – 2023 வரை இந்தியாவுக்காக 103 போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்கள் அடித்து நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் 2 தொடர்களை இந்தியா முதல் முறையாக அடுத்தடுத்து வென்று சரித்திரம் படைக்க அவர் முக்கிய பங்காற்றினார்.

முன்னதாக கிரிக்கெட்டில் அறிமுகமானது முதலே புஜாரா நங்கூரமாகவும் பொறுமையாகவும் விளையாடி ரன்களை குவிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய 5 போட்டிகளில் அதிரடி காட்ட தவறிய அவருக்கு மேற்கொண்டு இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரிலும் பெரிய ரன்கள் குவிக்காத காரணத்தால் அவரை அனைவரும் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று முத்திரை குத்தினார்கள்.

- Advertisement -

என்னை மாதிரி வேணாம்:

அதனாலேயே ஒரு கட்டத்திற்கு மேல் அவரை எந்த ஐபிஎல் அணிகளும் வாங்கவில்லை. 2021 ஐபிஎல் தொடரில் 50 லட்சத்திற்கு அவரை வாங்கிய சிஎஸ்கே அணி விளையாடும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் இனிவரும் காலங்களில் இளம் வீரர்கள் தம்மை போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற முடியாது என்று புஜாரா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

எனவே தம்மைப் போல் இளைஞர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி தங்களுடைய கேரியரை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உண்மையில், டெஸ்ட் ஃபார்மெட்டில் கவனம் செலுத்துமாறு எந்த இளம் வீரர்களுக்கும் நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏனெனில் காலம் மாறுகிறது”

- Advertisement -

புஜாரா அட்வைஸ்:

“வெள்ளைப்பந்து போட்டிகள் பிரபலமாக இருக்கிறது. எனவே நீங்கள் அதற்கு தகுந்தார் போல் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். டெஸ்ட் போட்டிகளுடன் வெள்ளைப்பந்து போட்டிகளும் வருங்காலமாக இருக்கும். டெஸ்ட் போட்டிகள் எங்கேயும் செல்லாது. அது உயர்வுடன் இருக்கும். ஆனால் ஒரு இளம் வீரர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தேர்வாக வேண்டுமெனில் ஐபிஎல் டி20 அல்லது ஒருநாள் போட்டிகளில் அசத்த வேண்டும்”

“அங்கே நீங்கள் நல்ல பிளேயராக செயல்படவில்லையெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைப்பது. ரஞ்சிக் கோப்பையில் அசத்துவதால் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அது அரிதானது. ஒரு ரஞ்சி அல்லது துலீப் கோப்பையில் அதீத அற்புதமாக செயல்பட்டால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓரளவு அசத்தினாலே வாய்ப்பு எளிதாக கிடைக்கும்”

இதையும் படிங்க: இப்படி ஒரு திறமையை அவரிடம் தான் பாக்குறேன்.. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை புகழ்ந்து தள்ளிய – மொயின் அலி

“எனவே ஒரு இளம் வீரருக்கு அனைத்து ஃபார்மெட்டிலும் கவனம் செலுத்துங்கள் என்று நான் பரிந்துரைப்பேன். நான் அதைத் தவற விட்டு விட்டேன். மற்றவர்கள் அதைச் செய்ய நான் பரிந்துரைக்க மாட்டேன். அதே சமயம் நீங்கள் மரியாதையும் சிறந்த வீரர் என்ற பெயரையும் எடுக்க விரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவது முக்கியம்” என்று கூறினார்.

Advertisement