இந்திய அணிக்காக நிச்சயம் இவர் அற்புதங்களை நிகழ்த்துவார் – இளம்வீரரை புகழ்ந்த தேர்வுக்குழு தலைவர்

Chetan-1
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய அணியில் சில இளம் வீரர்களுக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான ஒரு பேட்ஸ்மேனாக பார்க்கப்படுபவர் 24 வயதான ருதுராஜ் கெய்க்வாட். ஏற்கனவே இந்திய அணிக்காக இலங்கை தொடரின்போது தவான் தலைமையில் அறிமுகமாகி இருந்தாலும் அவருடைய திறமை காரணமாக தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருந்தது.

gaikwad

- Advertisement -

அது மட்டுமின்றி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர் மற்றும் விஜய் ஹசாரே தொடர் என தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார். அதன்படி ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது இந்த வாய்ப்பு குறித்து பேசியுள்ள தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறுகையில்

24 வயதான ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல விஜய் ஹசாரே தொடரிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவரை நாங்கள் தேர்வு செய்து தற்போது இந்திய அணிக்காக அனுப்பி உள்ளோம். நிச்சயம் அவர் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடும் பட்சத்தில் அவருடைய தன்னம்பிக்கையும் இன்னும் சற்று அதிகரிக்கும். ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் அவரை இடம் வழங்கப்பட்டது.

gaikwad

அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவரை இடம்பெற செய்துள்ளோம். நிச்சயம் அவருக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் பயன்படுத்தும் பட்சத்தில் இந்திய அணிக்காக அதிசயங்களை நிகழ்த்துவார் என்று நம்பிக்கை எங்களிடம் உள்ளது. ஐபிஎல் தொடரில் அவர் விளையாடியதை விட விஜய் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் 603 ரன்கள் குவித்தது அசத்தலாக ஆடியிருந்தார் என கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள சுந்தருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்க – இதுதான் காரணமாம்

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த போதே இந்திய அணியில் அவரை நிரந்தர வீரராக மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வந்த நிலையில் தற்போது அவருக்கு மெல்ல மெல்ல இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது அனைவர்க்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. நிச்சயம் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறும் பட்சத்தில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிரந்தர இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement