
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிக்கு தகுதி பெற அத்தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் இந்தியா விளையாட உள்ளது.
இருப்பினும் சொந்த மண்ணிலேயே தோற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெல்லுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. போதாகுறைக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். அதனால் இம்முறை இந்திய அணியை கண்டிப்பாக ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று ரிக்கி பாண்டிங் முதல் பட் கமின்ஸ் வரை அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இந்நாள் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அந்தத் தொடர் பற்றி இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவை அதன் சொந்த இந்தியா வீழ்த்தும் என்று 100% நான் உறுதியாக சொல்வேன். ரோஹித் தலைமையில் நாம் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறுவோம். மீண்டும் ஆஸ்திரேலியாவில் நாம் வெற்றி வாகை சூடுவோம்”
“ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எப்போதும் நாம் மகிழ்ச்சியாக விளையாடியுள்ளோம். தற்போது நாம் தொடரை வெல்லக்கூடிய அணியாக களமிறங்க உள்ளது சிறந்த விஷயமாகும். ஏற்கனவே இரண்டு முறை ஆஸ்திரேலியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் நாம் வீழ்த்தியுள்ளோம். எனவே அவர்கள் தான் கவலையுடன் இருக்க வேண்டும்”
“அழுத்தம் கமின்ஸ் மேல் இருக்குமே தவிர ரோகித் சர்மா மேல் கிடையாது. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் இப்படி சொல்வதெல்லாம் உள்ளுக்குள் எந்தளவுக்கு பயம் பதற்றத்துடன் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. இந்தியாவுக்காக ரோஹித், விராட் கோலி செய்ததை மதியுங்கள். அவர்களைப் போன்ற வீரர்கள் எப்போதும் சுமாரான ஃபார்மில் இருந்ததில்லை. இன்னும் விளையாடுவதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்”
இதையும் படிங்க: இந்திய அணிக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஷமி கம்பேக் கொடுக்கும் தேதி அறிவிப்பு.. ஆஸியில் விளையாடுவாரா?
“விராட் கோலி, ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் அசத்து உள்ளதை நாம் பார்க்கும். அவர்களுடைய மரபை ஜெய்ஸ்வால், சுப்மன், ருதுராஜ் போன்ற இளம் வீரர்கள் 3 எடுத்துச் செல்வார்கள். ஜெய்ஸ்வால், கில் இப்போதே என்னை இம்ப்ரெஸ் செய்துள்ளார்கள். அவர்கள் விராட் மற்றும் ரோகித்திடமிருந்து நிறைய அனுபவங்களையும் பெற்று இன்னும் முன்னேற்றமடைவார்கள்” என்று கூறினார்.