கொரோனாவால் உயிரிழந்த தந்தை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம்வீரரின் வீட்டில் நடந்த சோகம் – விவரம் இதோ

sakariya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 14வது ஐபிஎல் சீசனில் பல இந்திய இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதன்படி இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விளையாடிய ஏழு போட்டியிலேயே அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தவர்களில் முக்கிய வீரராக ராஜஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா திகழ்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமாகி முன்னணி வீரர்களுக்கு எதிரே தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

sakariya 2

- Advertisement -

மேலும் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனிடமும் இவர் தனது சிறப்பான பந்துவீச்சு காரணமாக பாராட்டையும் பெற்றார். தற்போது ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் வீரர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் சக்காரியாவும் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தான் ஐபிஎல் தொடரில் பெரும் இந்த வருமானம் தான் என் வாழ்வாதாரம் என்று அவர் கூறியிருந்தார்.

என் தந்தையை இந்த ஐ.பி.எல் தொடரில் கிடைத்த பணத்தின் மூலம்தான் நான் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரின் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து அவர் கட்டி நிறுத்தி வைத்திருக்கும் வீட்டியையும் கட்டி முடிக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

Sakariya

மேலும் அவருடைய உறவினர்களிடையே அவர்தான் தற்போது அதிகமாக சம்பாதித்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருடைய தந்தை காஞ்சி பாய் கொரோனாவிற்கு சிகிச்சைக்கு பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். குஜராத்தின் பாவ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நோய் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவரது தந்தை இறந்தது மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

sakariya

இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சகோதரர் ராகுல் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார். எளிய குடும்பத்தில் இருந்து வந்து இன்று அவர் ஐபிஎல்லில் சாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் இவருடைய சகோதரர் மற்றும் தந்தை என அடுத்தடுத்த இழப்புகள் இவரை பெரும் வேதனையில் தள்ளியுள்ளது.

Advertisement