முதல் நாளில் ஏற்பட்ட ஏமாற்றம்.. சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட் விலையை குறைத்த நிர்வாகம் – என்ன நடந்தது?

IND-vs-BAN
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று செப்டம்பர் 19-ஆம் தேதி வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

டிக்கெட் விலையை அதிரடியாக குறைத்த நிர்வாகம் :

வங்கதேச அணி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல இந்த இரண்டு போட்டிகளின் வெற்றி முக்கியம் என்பதனாலும் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதேவேளையில் அண்மையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணியானது அங்கு டெஸ்ட் தொடரை வென்ற கையோடு இங்கு வந்துள்ளதால் இந்திய அணியையும் வீழ்த்தும் முனைப்போடு விளையாடி வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராத் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் போன்றோர் பல மாதங்களுக்கு பிறகு இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் இந்த போட்டியின் மீதான கவனமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் விலை 15 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே டிக்கெட் விற்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இதன் காரணமாக ஏமாற்றத்தை சந்தித்த ரசிகர்கள் மைதானத்திற்கு பெரிய அளவில் நேரில் வரவில்லை.

- Advertisement -

கடந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற்ற போது குறைந்தபட்ச விலை 200 ரூபாயாக இருந்ததால் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் இம்முறை குறைந்தபட்ச டிக்கெட் 1000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டதால் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக போட்டியின் முதல் நாளில் முக்கிய முடிவை எடுத்துள்ள மைதானத்தின் நிர்வாகம் தற்போது ஆரம்பகட்ட டிக்கெட்டின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

இதையும் படிங்க : வங்கதேச அணிக்கெதிராக மட்டும் ஏன் இப்படி நடக்குது? ரோஹித் சர்மா சந்தித்துள்ள இக்கட்டான நிலை – விவரம் இதோ

அந்த வகையில் குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை மீண்டும் 200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை மைதானத்திற்குள் வந்து ரசிகர்கள் வெளியேறினால் மீண்டும் வருவதற்கு மறுபடியும் டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே ரசிகர்கள் கூட்டம் குறைந்துள்ளதால் டிக்கெட் விலையை தற்போது மைதான நிர்வாகம் குறைத்துள்ளது. இதன் காரணமாக போட்டியின் இரண்டாம் நாளிலிருந்து ரசிகர்களின் வரவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement