சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷான்டோ முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
வங்கதேச அணிக்கெதிராக தொடர் ரோஹித்தின் சரிவு :
இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 19 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சுப்மன் கில், விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தற்போது முதல் இன்னிங்சில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனான ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இவ்வேளையில் வங்கதேச அணிக்கு எதிராக இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெரியதாக சாதிக்கவில்லை என்பது குறித்த மோசமான புள்ளி விவரமும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இதுவரை வங்கதேச அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா மொத்தம் 39 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் ரோகித் சர்மாவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணி என்றாலே ஒரு மோசமான செயல்பாடு தான் வெளிப்பட்டுள்ளது கண்கூடாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராகவே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மாவிற்கு வங்கதேச அணிக்கு எதிராக இருக்கும் தடுமாற்றம் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க : பி.சி.சி.ஐ கொடுத்த சிறப்பு அனுமதியால் 6 ரன்களில் அவுட்டாகி சென்ற ரோஹித் மற்றும் கோலி – என்ன நடந்தது?
சென்னை சேப்பாக்கம் மைதானம் இன்று சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மைதானத்தின் தன்மையை கணித்து பந்துவீச்சை தேர்வு செய்தது சரியான முடிவாக அமைந்ததோடு தற்போது அவர்கள் சிறப்பான செயல்பாட்டையும் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



