சென்னை சி.எஸ்.கே அணி பங்கேற்கும் 14 போட்டிகளின் முழுஅட்டவணை – விவரம் இதோ

csk
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி இந்தியாவில் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் இங்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி செப்டம்பர் 19-ம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Dubai

- Advertisement -

இந்நிலையில் அதற்கான போட்டி அட்டவணை எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஐபிஎல் நிர்வாகம் போட்டி அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இவர்களின் இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

இந்த தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே விளையாடாதே என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது முதல் போட்டியாக மும்பை மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் மோதுகின்றன. மேலும் தொடரின் மொத்த போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியாகி உள்ளது. அதற்கான அனைத்து அறிவிப்பும் தெளிவாக வெளியாகியுள்ளது.

ipl

ipl1

ரசிகர்களின் சுவாரசியத்தை குறைக்காத வண்ணம் இத்தொடரின் பல போட்டிகள் இரவு 7.30 மணிக்கு நிறைய போட்டிகள் நடைபெற உள்ளன. தற்போது வெளியான இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும் இந்த தொடரின் முதல் போட்டியை காண ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 14 போட்டிகளின் விவரம் வருமாறு:-

- Advertisement -

1. செப்டம்பர் 19-ந்தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை – அபு தாபி (இரவு 7.30 மணி)

2. செப்டம்பர் 22-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)

- Advertisement -

3. செப்டம்பர் 25-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் – துபாய் (இரவு 7.30 மணி)

4. அக்டோபர் 2-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் – துபாய் (இரவு 7.30 மணி)

5. அக்டோபர் 4-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் – துபாய் (இரவு 7.30 மணி)

6. அக்டோபர் 7-ந்தேதி – புதன்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – அபு தாபி (இரவு 7.30 மணி)

7. அக்டோபர் 10-ந்தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – துபாய் (இரவு 7.30 மணி)

8. அக்டோபர் 13-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் – துபாய் (இரவு 7.30 மணி)

9. அக்டோபர் 17-ந்தேதி – சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)

10. அக்டோபர் 19-ந்தேதி – திங்கட்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் – அபு தாபி (இரவு 7.30 மணி)

11. அக்டோபர் 23-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)

12. அக்டோபர் 25-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மதியம் 3.30 மணி)

13. அக்டோபர் 29-ந்தேதி – வியாழக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – துபாய் (இரவு 7.30 மணி)

14. நவம்பர் 1-ந்தேதி – ஞாயிற்றுக்கிழம – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் – அபு தாபி (மதியம் 3.30 மணி)

Advertisement