ஐபிஎல் 2018…முதல் போட்டிக்கான சென்னை அணி அறிவிப்பு – யார் யார் தெரியுமா ?

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 9 நகரங்களில் 51 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

CSK

- Advertisement -

ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கப்படவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.இரண்டாண்டு தடைக்கு பின்னர் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடப்போகும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இந்நிலையில் மும்பையுடன் மோதப்போகும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சார்பாக களமிறங்கப்போகும் ஆக்சன் 11 வீரர்கள் யாரெல்லாம் என்பது குறித்து கிரிக் தமிழ் மூலம் கணித்துள்ளோம்.வாருங்கள் சென்னை அணி சார்பாக ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் களமிறங்கப்போகும் வீரர்களை பற்றி பார்ப்போம்.

1. தோனி.

- Advertisement -

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்.சென்னை அணி விளையாடிய அனைத்து சீசனிலும் பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துச்சென்று அசத்தியவர்.இருமுறை சென்னை அணிக்காக ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தந்துள்ள திறமையான கேப்டன்.இரண்டாடு தடைக்கு பின்னர் களமிறங்கும் இந்த ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்று தருவார் என ரசிகர்களால் நம்பப்படுபவர்.

2. முரளி விஜய்.

- Advertisement -

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி எதிரணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் இவர் தமிழகத்தை சேர்ந்த சிறந்த பேட்ஸ்மேனும் கூட.ஆரம்ப காலம் முதலே இவரும் சென்னை அணிக்காக விளையாடி வருபவர்.

3. டூப்ளசிஸ்

- Advertisement -

சென்னை அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இவரும் அதிரடி பேட்ஸ்மேன் தான்.

4. சுரேஷ் ரெய்னா.

சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் முக்கியமான வீரர் சுரேஷ்ரெய்னா. தனது அதிரடியான பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கையே மாற்றுபவர். இக்காட்டான சூழலில் பந்துவீசி எதிரணியினரை தினறச்செய்து விக்கெட்டுகளை வீழ்த்தவும் செய்யும் இவர் சிறந்த பீல்டரும் கூட.

சென்னை அணிக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் ரெய்னா என்று சொன்னால் அது மிகையாகாது.

5. ஷேன் வாட்சன்.

சென்னை அணியின் மற்றொரு ஆல்ரவுண்டரும் அதிரடி பேட்ஸ்மேனும் கூட . சென்னை அணிக்காக இக்கட்டான சூழலில் தொடக்க வீரராக களமிறங்கி ஆடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

6. கேதார் ஜாதவ்.

வளரும் இளம் வீரரான கேதார் ஜாதவ் நம்ம தல தோனியின் நம்பிக்கைக்குரிய வீரர்களில் ஒருவர். ஆறாவது வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடக்கூடியவர். சுழற்பந்து வீச்சிலும் கெட்டிக்காரர்.

7. பிராவோ.

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டரான பிராவோ சென்னை அணியின் முக்கிய வீரர்.பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் அசத்தும் இவர் சென்னை அணி ரசிகர்களை தனது நடனத்தால் கட்டிப்போடுபவர்.படு சுட்டியான வீரரான பிராவோ தோனியின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள மற்றொரு வீரர்.

8. ரவீந்திர ஜடேஜா.

சென்னை அணியின் மற்றொரு ஆல்ரவுண்டரான ஜடேஜா சிறந்த பந்துவீச்சாளரும் கூட. முந்தைய ஐபிஎல் தொடர்களில் சென்னை அணி பெரும்பாலான வெற்றிகளை பெற உறுதுணையாக இருந்தவரும் கூட.

9. ஹர்பஜன்சிங்.

சென்ற ஐபிஎல் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் இந்த ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் முன்னதாக விளையாடிய ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக சிறப்பாக செயல்பட்டவர்.இந்த ஆண்டுமுதல் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள இவர் தனக்கான தனி முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

10. ஷர்துல் தாக்கூர்.

நடந்து முடிந்த நிடாஸ்கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசிய இளம் வேகப்பந்துவீச்சாளர். சமீபகாலங்களாக சிறப்பாக செயல்பட்டு வருவதால் 11பேருக்கான சென்னை அணியில் இவருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

11. மார்க் வுட்.

உலகின் தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர்.தனது பந்துவீச்சால் எதிரே நிற்கும் வீரருக்கு மரண பயத்தை காட்டிடும் வித்தகர்.இந்த ஐபிஎல்-இல் சென்னை அணியின் துருப்புச்சீட்டாக தோனி இவரை பயன்படுத்தலாம்.

மேலே குறிப்பிட்ட 11பேரும் மும்பை அணிக்கெதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக களமிறக்கப்படலாம் என்று நாங்கள் கணித்துள்ளோம். கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்க வீரரான இம்ரான் தாஹீர் சென்னை அணிக்காக களமிறக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

Raina

இந்த ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியின் வீரர்களின் முழு விவரங்கள் :

தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, பிராவோ, கனிஷ்க் சேத், மார்க் வுட், ஷேன் வாட்சன், மோனுகுமார், சைதன்ய பிஷ்னாய், ஷிதிஷ் சர்மா, துருவ் ஷோரி, லுங்கி இங்கிடி, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர், டுபிளெசிஸ், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஜகதீசன் நாராயண் (வி.கீ/பேட்ஸ்மென்),அம்பாத்தி ராய்டு, கரண் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், முரளி விஜய், கே.எம்.ஆசிப்.

Advertisement