மும்பைக்கு எதிரான தோல்விக்கு பிறகு டெல்லி அணியிடம் அபார வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது சென்னை அணி. மேலும் நேற்று நடந்த ஆட்டத்தில் வாட்ஸனின் அதிரடி, தோனியின் அதிவேக அரை சதம், பண்ட மற்றும் ஷங்கரின் ரன் குவிப்பு என்று சொல்லிக் கொணடே போகலாம்.
மேலும் இந்த போட்டியில் ஒரு சில ஸ்பெஷலான சாதனைகளும் நடந்துள்ளது. அதனை பற்றிய சில தொகுப்புகளை கீழே காணலாம்.
1. இந்த போட்டியில் சென்னை அணியின் டோனி 22 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இது அவருடைய ஐபில் போட்டிகளில் இரண்டாவது அதிவேக அரைசதமாகும். மேலும் t20 போட்டிகளில் இது அவருடைய 3 வது அதிவேக அரைசதமும் கூட. ஏற்கனவே 2013 இல் ஹைதராபாத்துடன் ஆடிய ஐபில் போட்டியில் 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார் தோனி.
2. நேற்று போட்டி நடந்த புனே மைதானத்தி சென்னை அணி நடித்துள்ள 211 ரன்கள் தான் இதுவரை அந்த மைதானத்தில் அடித்த அதிகப்படியான ரன் ஆகும். இதற்கு முன்னாள் டெல்லி அணி 204 எடுத்ததே அதிகப்படியாகன ரன்களாக இருந்து வந்தது.
3. இதுவரை நடந்த ஐபில் போட்டிகளில் ஒரு கேப்டனாக அதிக படியான ரன்களை குவித்து முதல் இடத்தில் உள்ளார் தோனி. அந்த பட்டியலில் 3557 ரன்களை குவித்து தோனி 3518 குவித்துள்ள கேப்டன் கம்பிரின் இடத்தை பறித்துள்ளார் தோனி.
4. இதுவரை ஒரு போட்டியில் 16 ஆட்டத்தில் 200 அதிகமான ரன்களை எடுத்துள்ள அணி என்ற பட்டியலில் சென்னை அணிமுதல் இடத்தில உள்ளது. இரண்டாவது இடத்தில் 14 போட்டிகளில் 200 மேற்பட்ட ரன்களை எடுத்து இரண்டாம் இடத்தில உள்ளது பெங்களூர் அணி.
5. டெல்லி அணியின் லியம் ப்ளுங்கட் 3 ஓவர்கள் வீசி 52 ரன்களை அளித்திருந்தார். இதன் மூலம் ஒரு போட்டியில் 3 அல்லது அத்தகு மேல் வர்களை வீசி அதிகப்படியான ரன்களை கொடுத்த பந்துவீச்சாளர் என்ற பட்டியலில் 3 வது இடத்தை பிடித்துள்ளார். இதில் முதல் இரண்டு இடத்தில் உள்ள மிச்சேல் மார்ஷ் மற்றும் ஹர்சல் படேல் 3 ஓவர்களில் 56 ரன்களை கொடுத்துள்ளனர்.
6. நேற்று வெற்றி பெட்ரா சென்னை அணிக்கு இது 100 வது வெற்றியாகும். இதன் மூலம் 100 போட்டிகளில் வெற்றி பெட்ரா 2வது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது சென்னை அணி. இந்த சாதனையை சென்ற ஆண்டே படைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
7. இந்த போட்டியில் டெல்லி அணிக 198 ரன்களை குவித்தது. இதன் மூலம் அந்த அணி அடித்த அதிகப்படியான ரன்களாக இந்த ரன் பதிந்துள்ளது. ஏற்கனவே அந்த அணி 2009 நடந்த போட்டியில் 189 ரன்களும், 2012 நடந்த போட்டியில் 194 ரங்களும் தான் அந்த அணியின் அதிகப்படியான ரன்களாக இருந்து வந்தது.