ஐ.பி.எல் போட்டிகள் புனேவில் நடத்துவதில் மீண்டும் சிக்கல் ?…புனே உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

- Advertisement -

புனே மைதானப் பராமரிப்புக்காகப் பாவனா அணையிலிருந்து நீர் எடுக்க மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துக்குத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராகச் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடிய போட்டியின்போது பல்வேறு தரப்பினரும் சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தினர்.
dhoni1

தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் ஐ.பி.எல் போட்டிகளுக்கு உரிய பாதுகாப்புக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் பி.சி.சி.ஐ-யிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த போட்டிகள் புனே மைதானத்தில் நடைபெறும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்தது.

- Advertisement -

இந்தநிலையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் புனேவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், `மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், புனே மைதானத்தைப் பராமரிக்கப் போதுமான தண்ணீர் இருக்கிறதா.அதற்குத் தேவையான தண்ணீரை எப்படி ஏற்பாடு செய்வீர்கள்’ என மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துக்குக் கேள்வி எழுப்பியிருந்தது.
raina-injury
இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கம், புனே மைதானப் பராமரிப்புக்கு உரிய நீர் இருப்பதாக விளக்கமளித்திருந்தது. ஆனால், கிரிக்கெட் சங்கத்தின் விளக்கத்தை ஏற்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றம், ஐ.பி.எல் போட்டிகளின்போது புனே மைதானப் பராமரிப்புக்கு பாவனா அணையிலிருந்து நீர் எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரை இதேநிலை தொடரும் என்றும் உயர் நீதிமன்றம், தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Advertisement