இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு இந்த ஐ.பி.எல் ஆண்டு களமிறங்கிய சென்னை அணியின் போட்டிகளை காண சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். அதற்கேற்றாற் போல முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. ஆனால் அதற்கு பின்னர் விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் என்று தமிழகத்தில் பல பிரச்சனை காரணமாக சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் புனே மைதானத்திற்கு மற்றும் செய்யப்பட்டது.
இதனால் சென்னையில் நடக்கும் போட்டிகளை காண ஆவலுடன் இருந்த ரசிகர்கள் வருத்ததிற்கு உள்ளாகினர். ரசிகர்களை போலவே கேப்டன் தோனியும் வருதடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமை(மே 26 ) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தோனி ” இந்த ஆண்டு சொந்த மண்ணான சென்னையில் போட்டிகளை விளையாட முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது இருப்பினும் ஒரு போட்டியிளாவது சொந்த மண்ணில் விளையாடியது சந்தோசம் தான்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தோனி “இப்போதைக்கு எங்களுக்கு கொண்டாட்டங்கள் குறித்து எந்த திட்டமும் இல்லை. நாங்கள் நாழி சென்னைக்கு சென்று ரசிகர்களையும் எங்களுக்கு நெருக்கமானவர்களையும் சந்திக்க உள்ளோம், அத்துடன் மாலை ஒரு விடுதியில் தங்கி இந்த வெற்றியை கொண்டாடவுள்ளோம்” என்று தெரிவித்ததிருந்தார்.
இந்நிலையில் சில மணி நேரத்துக்கு முன்னர் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சென்னை வீரர்கள் வந்தடைந்தனர். விமான நிலையத்தில் பெரும் திரளாக கூடி இருந்த சென்னை ரசிகர்கள் அனைவரும் அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.