அதிக ரன், அதிக சிக்ஸர்..! ஐ.பி.எல் தரவரிசையை ஆக்கிரமித்த அணி எது தெரியுமா..?

ipl
- Advertisement -

நடந்து வரும் ஐ.பி.எல் 11 சீசனில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் முதல் அணியாக பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது ஹைதராபாத் அணி. அந்த அணியை தொடர்ந்து தனது பிலே ஆப் சுற்றின் வருகையை பதிவு செய்துள்ளது சென்னை அணி.

IPL 2018 - SRH vs CSK

- Advertisement -

இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் தடைக்கு பிறகு களமிறங்கியுள்ள சென்னை அணி, நடந்து முடிந்த அணைத்து ஐ.பி.எல் தொடர்களிலுமே பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த ஐ.பி.எல் தொடரில் பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல், இந்த தொடரின் ஒரு சில சாதனை பட்டியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது சென்னை அணி.

இந்த ஐ.பி.எல் சீசனில் அனைத்து அணிகளுமே 12 போட்டிகளில் விளையாடிவிட்டது. நடந்து முடிந்த இந்த 12 போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முதல் 10 இடத்தில இருக்கும் வீரர்களின் பட்டியலில் சென்னை அணியின் அம்பதி ராயுடு (535) 4 வது இடத்திலும், வாட்சன் (424) 8-வது இடத்திலும், சென்னை அணியின் கேப்டன் தோனி (413) 9 வது இடத்திலும் இருக்கிறார்கள்.

dhoni csk

watson

மேலும், இந்த தொடரை அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் சென்னை அணியின் அம்பதி ராயுடு (29) 3 வது இடத்திலும் ,தோனி (29) 5 வது இடத்திலும், வாட்சன்() 8 வது இடத்திலும் இருக்கிறார்கள். இதன் முதல் இரண்டு இடத்தில் டெல்லி அணியின் ரிஷப் பண்ட் (31) முதல் இடத்திலும், பெங்களூரு அணியின் ஏ.பி. டி வில்லியர்ஸ் (29) இரண்டாம் இடத்தில இருக்கின்றனர்.

Advertisement