சென்னையில் IPL போட்டியா..! முடிஞ்சா நடத்திப்பார்…சவால் விடும் Political லீடர் – யார் தெரியுமா ?

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இந்தமுறை ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றார்.அதையும் தாண்டி ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தால் போட்டி நடைபெறும் போது எங்களது ஆதரவாளர்கள் மைதானத்தில் புகுந்து போட்டிகளை நடத்தவிடாமல் போராடிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

murugan2

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் பல தற்போது தீவிர போராட்டத்தில் குதித்துள்ளன. இந்தப்போராட்டத்தில் ஆளும்கட்சியை தவிர்த்து அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தமிழக அரசியல் கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்த தடைக்கோரியும் ஆங்காங்கே நடத்திவரும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

ticket

அதில் பேசிய வேல்முருகன் “தமிழகத்தில் இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாது. அதையும் தாண்டி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் டிக்கெட் வாங்கி வைத்துள்ள எங்கள் ஆதரவாளர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்குள் புகுந்து போட்டியை நடத்தவிடாமல் போராடுவார்கள் என்று சவால் விட்டுள்ளார்.இந்நிலையில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

- Advertisement -
Advertisement