இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணி இரண்டாவது போட்டியின் போது மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த வீரரை எந்த அணியும் வாங்காதது ஆச்சரியமா இருக்கு : சீக்கா ஸ்ரீகாந்த்
அதனை தொடர்ந்து நேற்று இந்தூர் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 337 ரன்களை குவிக்க பின்னர் 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் இந்திய அணியை 296 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய பல்வேறு வீரர்களை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வரும் வேளையில் நியூசிலாந்து அணி சார்பாக விளையாடிய கேப்டன் மைக்கல் பிரேஸ்வெல்லை இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டி கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
இந்த தொடரில் மைக்கல் பிரேஸ்வெல் பந்துவீச முடியாமல் போனது சற்று வருத்தம் தான். காயம் காரணமாக அவரால் பந்து வீச முடியாமல் போனது. இருந்தாலும் பேட்டிங்கில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நேற்றைய போட்டியில் கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரல் மிட்சல் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தார்கள்.
அதேவேளையில் பிரேஸ்வெல் ஆறாவது வீரராக உள்ளே வந்து 3 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரி 28 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடைய அதிரடியான ஆட்டம் தான் நியூசிலாந்து அணி 300 டூ 330 ரன்கள் வரை செல்ல ஒரு வித்தியாசமாக இருந்தது. அவர் மிக எளிதாக சிக்ஸ் அடிக்கிறார். எந்த ஒரு ஐபிஎல் அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வராதது நினைத்தால் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கிறது. தற்போது அவர் பந்து வீசாமல் இருந்தாலும் அவர் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர்.
இதையும் படிங்க : விராட் கோலியை விட அந்த பையனின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது.. நிச்சயம் பயந்திருப்பாங்க – சீக்கா கருத்து
அவரைப் போன்ற ஒரு வீரரை எந்த ஒரு ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுக்காதது ஏன்? என்று எனக்கு புரியவில்லை. சுழற்பந்து வீச்சில் அற்புதமாக செயல்படும் அவர் இறுதி நேரத்தில் அதிரடியாகவும் பேட்டிங் செய்கிறார். எனவே அவர் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்றும் ஸ்ரீகாந்த் பேசியது குறிப்பிடத்தக்கது.



