2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது நாளை டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மினி ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்று குறிப்பிட்ட சில வீரர்களை ஏலம் எடுக்க காத்திருப்பதால் எந்தெந்த வீரர்கள்? எந்தெந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் மினி ஏலத்திற்கான இடைவெளி ஒருநாள் மட்டுமே இருப்பதினால் இந்த மினி ஏலமானது பலரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சி.எஸ்.கே அணி பதிரானாவை நோக்கி செல்லக்கூடாது : சீக்கா ஸ்ரீகாந்த்
மேலும் இந்த மினி ஏலத்தில் முன்னணி அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சி.எஸ்.கே அணி எந்தெந்த வீரர்களை வாங்கலாம்? என்பது குறித்து முன்னாள் இந்திய கேப்டனான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் அவர் இலங்கையை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானாவிற்கு பதிலாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ஆண்ரிச் நோர்க்கியாவை வாங்கலாம் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இம்முறை நான் மீண்டும் மதீஷா பதிரானா இடம் செல்ல மாட்டேன்.
அவருக்கும் நோர்க்கியாவுக்கும் இடையே நல்ல மோதல் இருக்கும். நான் ஆண்ரிச் நோர்க்கியாவை தான் சி.எஸ்.கே அணிக்காக தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் ஆண்ரிச் நோர்க்கியா போன்ற வேகமாக பந்துவீசும் வீரர் திறமையாக செதுக்கப்பட வேண்டிய ஒருவர். ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல கேப்டன் என்பது முக்கியம்.
அந்த வகையில் மிகச் சிறப்பான பந்துவீச்சு திறனை கொண்டிருக்கும் ஆண்ரிச் நோர்க்கியா சிஎஸ்கே அணிக்கு வந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே நமது அணியில் கலீல் அகமது, நாதன் எல்லீஸ் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் நாம் ஒரு நம்பிக்கையான வேகப்பந்து வீச்சாளரை வாங்க வேண்டியது அவசியம். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு சிறப்பான தேர்வாக நோர்க்கியா இருப்பார் என ஸ்ரீகாந்த் கூறினார்.
இதையும் படிங்க : குல்தீப் யாதவிற்கு அடுத்து இரண்டாவது இந்திய சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தி – நிகழ்த்திய சாதனை
இது தொடர்பாக பேசிய மற்றொரு இந்திய முன்னாள் வீரரான பத்ரிநாத் : நோக்கியாவும், பதிரானாவும் குறைந்தபட்சம் தலா பத்து கோடி ரூபாய்க்கு செல்வார்கள் என்றும் மேலும் இவர்கள் இருவருமே அதிக தேவையுள்ள வீரர்களாக இருப்பார்கள் என்றும் தனது கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



