இந்திய அணி வீரர்களோடு அயர்லாந்து பறக்க உள்ள முக்கிய நிர்வாகி. இந்த டிசிஷன் – எதற்கு தெரியுமா?

IND
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை தொடர்ந்து இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற 4 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்த வேளையில் பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் இரு அணிகளுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் அடுத்ததாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. வரும் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய 2 தேதிகளில் நடைபெறும் இந்த ஆட்டம் காரணமாக வருகின்ற 24-காம் தேதி இந்திய அணி இந்தியாவில் இருந்து அயர்லாந்து புறப்பட்டு செல்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ள வேளையில் அணியில் ஒரு முக்கிய நடவடிக்கையாக தற்போது அயர்லாந்து செல்லும் இந்திய அணியுடன் தேர்வுக் குழு தலைவரும், முன்னாள் வீரருமான சேட்டன் சர்மாவும் பயணிக்க உள்ளதாக பிசிசிஐ நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Chetan

இதுகுறித்து அவர் கூறுகையில் : அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் தேர்வுக்குழு தலைவரான சேட்டன் சர்மாவும் நேரடியாக செல்கிறார். அங்கு நடைபெறும் அந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை கண்காணிக்க இருக்கும் அவர் அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை அவர்களின் திறனை நேரில் பார்வையிடவும் உலகக் கோப்பை அணிக்கான தயாரிப்புக்காகவும் இந்த தொடருக்கான இந்திய அணியுடன் செல்ல உள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து செல்லவிருக்கும் வேளையில் தற்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியுடன் தேர்வுக்குழு தலைவர் பயணிக்க உள்ளது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : இந்திய வீரரான அவரு ஓவர் வெயிட்டா இருக்காரு. அதான் அவரோட பிரச்சனை – டேனிஷ் கனேரியா குற்றச்சாட்டு

ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), புவனேஷ்குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் அய்யர், ரவி பிஷ்னோய், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல், உம்ரான் மாலிக்

Advertisement