IND vs BAN : ஆர்வமிகுதியால் சர்ச்சைக்கு ஆளான சாருலதா பாட்டி – விவரம் இதோ

உலக கோப்பை தொடரில் 40 ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 314 ரன்கள் குவித்தது

kohli-1
- Advertisement -

உலக கோப்பை தொடரில் 40 ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 314 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பங்களாதேஷ் இறுதிவரை போராடி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

Kohli 2

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்தது. அது யாதெனில் இந்த போட்டியை நேரில் காண 87 வயது மூதாட்டி (இந்திய ரசிகை) மைதானத்திற்கு வந்து இருந்தார் அவருடைய பெயர் சாருலதா இந்திய தேசியக் கொடியினை முகத்தில் வரைந்துகொண்டு, தேசிய கொடி பதியப்பட்ட ஒரு சால்வையை கழுத்தில் அணிந்து கொண்டும், பீப்பி ஊதி இந்திய அணியையும் , மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களை அவர் உற்சாகப்படுத்தினார்.

போட்டி முடிந்து ரோகித் மற்றும் கோலி ஆகியோர் இந்த பாட்டியிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றனர். இந்நிலையில் இணையதள வாசிகள் சிலர் சாருலதா பாட்டி ஆர்வமிகுதியில் ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் என்று அவரின் முகத்தில் தலைகீழாக வரையப்பட்டிருக்கும் தேசியக்கொடியினை குறிப்பிட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். (குறிப்பு : முகத்தின் இரு பகுதியிலும் தேசியக்கொடியை வரைந்திருக்கு பாட்டியின் ஒரு பக்கத்தில் மட்டும் தேசியகொடி தலைகீழாக இருக்கும்.)

ஆனாலும் சிலர் பாட்டிக்கு ஆதரவாக இந்த வயதில் அவருடைய கிரிக்கெட் ஆர்வம் பாராட்டுக்குரியது அதனைவிடுத்து தேசியக்கொடி தலைகீழாக தவறப்பட்டு வரைந்ததெல்லாம் ஒரு பிரச்சனையா என்பது போல கருத்துக்களை பதிவிட்டு சாருலதா பாட்டிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement