- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் என்ன மாற்றங்கள்.? 3வது போட்டியில் ஜெயிக்குமா.? ஓர் அலசல்

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று துவங்க இருக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்து கடும் விமர்சனத்துக்குள் உள்ளான இந்திய அணி, இன்று அணி தேர்வில் கவனமாக முடிவுகளை எடுக்க போகிறது. போட்டி துவங்கும் முன் இந்திய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்படும்.

இதில், சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. குறிப்பாக, “Out Of From”-ல் இருக்கும் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பண்ட் அறிமுக வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக தவான் ஆடுவார் என தெரிகிறது. மேலும் குலதீப்க்கு பதிலாக பும்ராவும் மற்றும் ஹார்டிக் பாண்டியா நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

- Advertisement -

கடந்த போட்டியின் தோல்வி குறித்து கூறிய கேப்டன் கோலி: இந்திய அணியின் தோல்விக்கு இந்திய அணி தேர்வும் ஒரு காரணம் என்று கூறியதால் இந்த போட்டியில் எந்த வீரர்களை சேர்க்கலாம் என யோசித்து முடிவு எடுக்கவுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என 5பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க போவதாக தெரிகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி ஒன்றே வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி ஆடப்போகிறது. என்று அணியின் கேப்டன் கோலி தெரிவித்து இருக்கிறார் . இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலோ அல்லது வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடர் இந்தியாவுக்கு உயிர்ப்புடன் இருக்கும். இந்தியா தோற்றால் தொடரை இழக்கும். மேலும் இந்த கிரிக்கெட் தொடரின் மீதுள்ள சுவாரசியமும் குறைந்து விடும்.

- Advertisement -
Published by