ஸ்பெஷல் பரிசுத் தொகையுடன்.. ஆஸியில் அசத்திய நிதிஷ் ரெட்டியை நேரில் வாழ்த்திய சந்திரபாபு நாயுடு

Nitish Reddy
- Advertisement -

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் நித்திஷ் ரெட்டி இந்திய அணிக்காக அசத்த துவங்கியுள்ளார். ஹைதராபாத் ஐபிஎல் அணியில் சிறப்பாக விளையாடியதால் இந்தியாவுக்காக கடந்த வங்கதேச டி20 தொடரில் அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் காரணமாக சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்டிருந்த அவருக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அப்போது உள்ளூரில் பெரியளவில் அசத்திய அனுபவமில்லாத நிதிஷ் ரெட்டியால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் ஆஸ்திரேலியாவில் அசத்த முடியுமா? என்று சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பினார். ஆனால் முதல் போட்டியிலேயே 42, 38* ரன்கள் குவித்த நித்திஷ் ரெட்டி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதற்கடுத்த போட்டிகளிலும் போராடிய அவர் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் சதத்தை அடித்து 114 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஆஸியில் அசத்தல்:

குறிப்பாக முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் தடுமாறிய இந்திய அணியை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து காப்பாற்றிய அவர் இன்னிங்ஸ் அவமானத் தோல்வியை தவிர்க்க உதவினார். அப்போது அவரை விமர்சித்த சுனில் கவாஸ்கர் எழுந்து நின்று பாராட்டினார். மொத்தத்தில் அந்தத் தொடரில் 5 போட்டிகளில் 298 ரன்களை குவித்த நித்திஷ் ரெட்டி கணிசமான விக்கெட்டுகளையும் எடுத்தார்.

அந்தத் தொடரை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய அவர் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் முட்டி போட்டு படிகளில் ஏறி தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டியை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் நித்திஷ் ரெட்டிக்கு 25 லட்சம் ஸ்பெஷல் பரிசு தொகையையும் அவர் வழங்கினார்.

- Advertisement -

முதல்வர் பாராட்டு:

அந்த சந்திப்பின் போது நித்திஷ் ரெட்டி இந்தளவுக்கு வளர காரணமான அவருடைய தந்தை முட்யலு ரெட்டி மற்றும் ஆந்திர மாநில வாரிய நிர்வாகிகள் உடன் இருந்தார்கள். இது பற்றி சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பகிர்ந்துள்ளது பின்வருமாறு. “அற்புதமான திறமை கொண்ட நம்முடைய கிரிக்கெட்டர் நித்திஷ் ரெட்டியை இன்று சந்தித்தேன். உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிதிஷ் தெலுங்கு சமூகத்தின் ஒளிரும் நட்சத்திரம்”

இதையும் படிங்க: கோலி, ரோஹித்தை அங்க போக சொல்ற நீங்க 664 ரன்ஸ் விளாசிய கருண் நாயரை ஏன் எடுக்கல.. ஹர்பஜன் விளாசல்

“அவரது பயணம் மற்றும் அவரின் பெற்றோர்களின் அசைக்க முடியாத ஆதரவை நான் பாராட்டினேன். அவர் இன்னும் பல சதங்கள் அடித்து வரும் வருடங்களில் இந்தியாவுக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக் கொடுக்க வாழ்த்துகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து டி20 தொடரில் நித்திஷ் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement