என்ன தப்புன்னே சொல்லாம ஓராண்டு தடைசெய்யப்பட்ட இலங்கை வீரர் – இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி

Chamika-Karunaratne
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஒருவருக்கு தற்போது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஓராண்டு தடை விதித்து அதிரடி காட்டியுள்ளது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த 26 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர் சமிகா கருனரத்தினே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு ஆண்டு தடை விதித்து அதிரடி காட்டியுள்ளது.

Chamika Karunaratne 1

- Advertisement -

அதன்படி அண்மையில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இலங்கை அணியுடன் ஆஸ்திரேலியா பயணித்திருந்த சமிகா கருணரத்னே அங்கு வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றும் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காகவும் அவர் தடை செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் சமிகா கருணரத்னேவின் மீதான குற்றச்சாட்டினை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு பின்பே உறுதி செய்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும் அவர் ஆஸ்திரேலியாவில் எந்தெந்த விதிமுறைகளை மீறினார் என்பது குறித்த தெளிவான தகவலை இலங்கை வாரியம் வெளியிடவில்லை.

Chamika Karunaratne 2

அதேவேளையில் சமிகா கருணரத்னேவும் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஒரு ஆண்டு தடை மற்றும் 5000 டாலர் அபராதமும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தற்காலிக தடை என்பதால் கருணரத்னே சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட முடியாது என்றாலும் லீக் போட்டிகளில் விளையாடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

எனவே எதிர்வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கான இலங்கை அணியில் இருந்து அவர் நீக்கப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs NZ : ஒருநாள் தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? – எந்த சேனலில் பார்க்கலாம்?

26 வயதான சமிகா கருணரத்னே இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 1 டெஸ்ட் போட்டி, 18 ஒருநாள் போட்டி மற்றும் 38 டி20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement