ஆசியக்கோப்பை 2022 : இந்தியா, பாகிஸ்தானை தொடர்ந்து இலங்கை அணியிலும் – முக்கிய வீரர் விலகல்

sl
- Advertisement -

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஆறு முக்கிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக்கோப்பை தொடரானது கடந்த 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த ஆசியக்கோப்பை தொடரானது வருகிற ஆகஸ்ட் 27-முதல் செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது அணியின் வீரர்களை அறிவித்து விட்டனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த தொடரில் இருந்து சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி வருவது அந்தந்த அணிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ஆசிய கோப்பை அணியை தேர்வு செய்வதற்கு முன்னதாக இந்திய அணியில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறவில்லை என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

அதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட வேளையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சாஹின் அப்ரிடி காயம் காரணமாக விலகி உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி அடுத்தடுத்து நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறி வருவது ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது.

Chameera

இந்நிலையில் இந்தியா,பாகிஸ்தான் அணிகளை தொடர்ந்து தற்போது இலங்கை அணியிலும் ஒரு நட்சத்திர வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இலங்கை அணியைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக தற்போது ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இலங்கை அணிக்கும் இது பின்னடைவை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் சிறப்பான வேகப்பந்து வீச்சாளரான சமீரா ரோஹித் சர்மாவை அதிக முறை விக்கெட் எடுத்த பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலைசிறந்த அதிரடி ஆட்டக்காரராக தற்போது திகழ்ந்துவரும் ரோகித் சர்மாவையே திணறவைக்கும் திறமையுடைய அவர் இல்லாதது நிச்சயம் அந்த அணிக்கு பெரிய பின்னடைவு என்று கூறலாம். ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி இதோ :

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையில் பாருங்க அவரோட ஆட்டத்தை. நட்சத்திர வீரரை ஆதரித்த – இர்பான் பதான்

1) தசுன் ஷனகா, 2) தனுஷ்கா குணதிலகா, 3) பதும் நிசாங்க, 4) குசல் மெண்டிஸ், 5) சரித் அசலங்கா, 6) பானுக ராஜபக்ஷ, 7) அஷேன் பண்டார, 8) தனஞ்ஜயா டி சில்வா, 9) வனிந்து ஹசரங்கா, 10) மஹீஷ் தீக்ஷனா, 11) ஜெப்ரி வான்டர்சே, 12) பிரவீன் ஜயவிக்ரம, 13) சமிகா கருணரத்னே, 14) தில்சன் மதுஷங்கா, 15) உவனிந்து பெர்னாண்டோ, 16) தினேஷ் சந்திமால்.

Advertisement