டி20 உலகக்கோப்பையில் பாருங்க அவரோட ஆட்டத்தை. நட்சத்திர வீரரை ஆதரித்த – இர்பான் பதான்

pathan 1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில மாதங்களில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடுத்து நடைபெற இருக்கும் ஆசியக்கோப்பை தொடரில் அடுத்த வாரம் பங்கேற்க உள்ளது. இந்த ஆசியக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் t20 உலக கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில் எதிர்வரும் ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களைக் கொண்டு செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் இந்திய அணி உலக கோப்பை தொடருக்காக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Asia-Cup

- Advertisement -

இந்நிலையில் சமீப காலமாகவே ரன் குவிக்க தடுமாறி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் எந்த அளவிற்கு இருக்கப் போகிறது என்பதை அனைவரது பேச்சாகவும் தற்போது மாறி உள்ளது. ஏனெனில் அண்மைக்காலமாகவே பேட்டிங்கில் மோசமான சறுக்களை சந்தித்துள்ள விராட் கோலி எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவரால் டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறும் முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரை காட்டிலும் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக விராட் கோலி திகழ்வார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி என்ன நினைத்துக் கொண்டிருப்பார். எந்த மாதிரி மனநிலையுடன் வந்து விளையாடுவார் என்ற சிந்தனை என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Kohli

ஆம் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரானது அவருக்கு மிக முக்கியமான தொடர். ஏனெனில் என்னை பொருத்தமட்டில் வரவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி நிச்சயம் மிகச்சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. ஆனாலும் ஆசிய கோப்பை தொடரில் அவர் தனது பேட்டிங் பார்மை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றாலும் நிச்சயம் அவர் உலகக் கோப்பையில் அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாகவே இருப்பார்.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்கள் அனைத்தும் மிக நன்றாக இருக்கும். ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடும் தன்மை உடையவர் அதனால் தான் சொல்கிறேன் ஆசிய கோப்பை தொடரை விட இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பையில் விராட் கோலி முக்கியமான வீரராக இருப்பார்.

இதையும் படிங்க : பார்ம் தற்காலிம், க்ளாஸ் நிரந்தரம் – தவிக்கும் விராட் கோலிக்கு தெ.ஆ ஜாம்பவான் கொடுத்த மெகா ஆதரவு

அவர் இப்போது நம்பிக்கையுடன் இருக்கிறார். நிச்சயம் ஆசியக் கோப்பையில் மீண்டும் சிறப்பான பேட்டிங் பார்முக்கு திரும்புவார் என்றும் அதோடு உலகக்கோப்பை தொடரிலும் அவர் அசத்துவார் என்று நம்புவதாக இர்பான் பதான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement