சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த – இலங்கை நட்சத்திர வீரர்

Kapugedera

சமரா கப்புகெதரா கடந்த 2006 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மூலம் இலங்கை அணிக்கு அறிமுகமாகி இதுவரை 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1624 ரன்களை அடித்துள்ளார். மேலும் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 418 ரன்களையும், 43 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 703 ரன்களையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

kapu

இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்து உள்ளார். இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயாவர்த்தேனே ஓய்வை அறிவித்த பிறகு அவரது இடத்திற்கு சரியான வீரர் இவர்தான் என்று இலங்கை ரசிகர்கள் புகழப்பட்ட கப்புகெதரா நாளடைவில் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாததால் அணியில் விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவ்வப்போது போட்டிகளில் விளையாடி வந்த கப்புகெதராவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து வாய்ப்புகளே கிடைக்கவில்லை. மேலும் தற்போது 32 வயது அடைத்துவிட்டதால் மீண்டும் தான் அணியில் இடம்பெற சாத்தியமில்லை என்பதால் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வினை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.