MS Dhoni : கடைசி ஓவரை நான் ரசல்க்கு வீசும்போது தோனி கூறியவை இதுதான் – சாகர் விளக்கம்

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணிக்கு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கொல்கத்தா அணி சார்பாக 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரசல் 44 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ரசலின் இந்த ஆட்டம் காரணமாகவே கொல்கத்தா அணி ஓரளவு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Chahar

பின்னர் ஆடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர் டுபிலிஸிஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். தீபக் சாகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -

Gill

இந்த போட்டி குறித்து தீபக் சாகர் கூறியதாவது : நான் 19 ஆவது ஓவரை வீசவரும்போது முதல் 5 பந்துகளை நான் நினைத்தது போன்று வீசினேன். அப்போது கடைசி பந்தினை நான் வீச தயாராகும்போது தோனி என்னை நோக்கி ஓடிவருவதை கண்டு நான் பந்துவீச்சை நிறுத்தினேன். தோனி என் அருகில் வந்து நிதானமாக வீசு இந்த பந்தில் தான் ஆட்டத்தின் முடிவு இருக்கிறது.

Lynn

ஏனெனில் இந்த பந்தில் நீ சிங்கிள் கொடுத்தால் அடுத்த ஓவர் முழுவதுமாக ரசலுக்கு கிடைக்கும் அதனால் அவர் பெரிய அளவில் ரன்களை குவிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே பந்தினை பாதி பிட்சில் குத்தி ஆப் திசையில் போடு நிச்சயம் ரசல் திணறுவார் என்று தோனி கூறினார். அதேபோன்று ஆப் சைடில் பந்தினை வீசினேன் அவர் அந்த பந்தை அடிக்க தவறினார். மேலும், கடைசி ஓவரில் ரசல் ஒரு சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement