MS Dhoni : தோனி கோபத்துடன் என்னிடம் வந்து கூறியது இதுதான் – தீபக் சாகர் விளக்கம்

ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில்

Chahar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.

Dhoni 1

- Advertisement -

அதன்பிறகு சென்னை அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது துவக்க வீரரான டூப்ளிஸிஸ் சிறப்பாக ஆடி 54 ரன்களை அடித்தார். கடைசி கட்டத்தில் தோனி மற்றும் ராயுடு அதிரடியாக ஆடி அணியை ஒரு நல்ல இலக்கினை எட்ட உதவினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது.

அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Harbhajan

இந்த போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரண்டாவதாக பஞ்சாப் அணி விளையாடியது. அப்போது 19 ஆவது வீரரை வீச தீபக் சாகர் வீசவந்தார். அப்போது சென்னை அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது என்றே கூறலாம். ஆனால், அந்த ஓவரில் முதல் 2 பந்தினையும் நோபாலாக வீசினார். இதனை கண்ட தோனி கடும்கோபத்தில் உள்ளாகி சாகருக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் பந்துவீச செய்தார்.

- Advertisement -

Dhoni

இந்த நிகழ்வு குறித்து பேசிய தீபக் சாகர் கூறியதாவது : தோனி நான் தொடர்ந்து இரண்டு நோபால் வீசியதும் என்னிடம் வந்து ஏன் இப்படி வீசுகிறாய் ? என்று கோபமுடன் கேட்டார். பிறகு நீ உன்னுடைய திறமையை நிரூபிக்க இதுபோன்ற சில தருணங்களே கிடைக்கும். இதை நீ பயன்படுத்திக்கொள்.

Dhoni

 

மேலும், பதட்டத்தை குறைத்து மீண்டும் நீ நினைத்தவாறு பந்துவீச்சு என்றார். அதற்கு நான் ஸ்லோவர் பந்துவீச நினைத்து நோபால் வீசிவிட்டேன் என்று தோனியிடம் கூறிவிட்டு மீண்டும் சிறப்பாக பந்துவீசினேன். போட்டி அனைத்து சென்னை வீரர்களும் என்னிடம் வந்து சிறப்பாக பந்துவீசினாய் என்று கூறினார்கள். அப்போது தோனி என்னை நோக்கி சிரித்தவாறே வந்து என்னை கட்டியணைத்து சிறப்பாக வீசினாய் என்று பாராட்டினார். அதன்பிறகே நான் மகிழ்ச்சியடைந்தேன் என்று தீபக் சாகர் கூறினார்.

Advertisement