ஆர்.சி.பி டீம் இல்லனா நான் இந்த ஐ.பி.எல் டீமுக்காக தான் ஆடியிருப்பேன் – சாஹல் அளித்த பதில்

Chahal
- Advertisement -

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட அறிமுகமானார். அதில் இருந்து இதுவரை இந்திய அணிக்காக 54 ஒருநாள் போட்டிகள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 154 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இடம்பெறாத இவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனது அசாத்தியமான பந்து வீச்சினை கடந்த பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வருகிறார். தற்போது 30 வயதான சாகல் 31 பஸ்ட் கிளாஸ் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார்.

Chahal 1

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசினாலும் இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் 206 போட்டிகளில் விளையாடி அதிக அனுபவமுடைய வீரராக திகழ்ந்து வருகிறார். உள்ளூர் போட்டிகளில் ஹரியானா மாநில அணிக்காக விளையாடிய அவர் அதன் பிறகு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி தற்போது பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 106 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விராட் கோலியின் தலைமையின் கீழ் இவர் ஒரு முக்கியமான வீரராக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அதே போன்று இந்திய அணிக்கும் கோலியின் தலைமையில் இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்கள் அனைவரும் ஓய்வில் இருப்பதால் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

chahal 1

அந்தவகையில் ரசிகர்களின் பல்வேறு கருத்துகளுக்கு பதில் அளித்து வருகிறார். அதேபோன்று இணையத்தின் வாயிலாக கிரிக்கெட் ஊடகங்களுக்கும் அவர் தனது கிரிக்கெட் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இணையம் வாயிலாக அவர் அளித்துள்ள பேட்டியில் : ஆர்சிபி அணி இல்லை என்றால் ஐபிஎல் தொடரில் வேறு எந்த அணிக்காக விளையாடி இருப்பீர்கள் ? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

CSK

அதற்கு சற்றும் யோசனையின்றி சிஎஸ்கே என்ற பதிலை அளித்து இருந்தார். இந்த கேள்விக்கு பலரும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் விளையாட ஆசைப்படுவார் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐ.பி.எல் தொடரிலும் சரி தோனிக்கு கீழ் விளையாட எப்போதும் அவருக்கு விருப்பம் உள்ளது என்பது இந்த பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement