
இந்திய அணியை பொறுத்தவரை அணி வீரர்களுக்கு இடையே அடிக்கடி தனது நகைச்சுவையால் சுவாரஸ்யம் ஏற்படுத்தக் கூடிய தன்மை கொண்டவராக சுழற்பந்துவீச்சாளர் சாஹல் பார்க்கப்படுகிறார். போட்டியில் சீரியஸாக பந்துவீசுவது மட்டுமின்றி ஆட்டம் முடிந்து வீரர்களை பேட்டி எடுப்பது, பேருந்தில் அணி வீரர்களை கலாய்ப்பது, ஹோட்டலில் ஆட்டம் என அவரது சேட்டைகள் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் அவர் டுவிட்டரிலும் அதேபோன்ற தனது கேலியான சேட்டைகளை அவ்வப்போது செய்வார். கடந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது பேட்டிங் பயிற்சி செய்வது போல பேட்டை பிடித்து போஸ் கொடுத்த ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சாஹல் அதில் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் அதேபோன்று ஆடும் புகைப்படத்தை இணைத்து பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தை பதிவிட்ட சாஹல் அவர்கள் இருவரும் என்னுடைய ஷாட்டை காப்பி அடிக்கிறார்கள். பரவாயில்லை இளைஞர்கள் விளையாடட்டும் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் அதற்கு விமர்சையான கமெண்டுகளும் வருவது குறிப்பிடத்தக்கது.