நானே இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து பாதியில் விலகலாம்னு நெனச்சேன் – சாஹல் பகிர்ந்த சோகம்

Chahal
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது 29 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இம்மாதத் துவக்கத்தில் ஒத்திவைக்கப்பட்டது. வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இந்த தொடரை காலவரையின்றி ஒத்தி வைத்த பிசிசிஐ தற்போது எஞ்சியுள்ள போட்டிகளை செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் வெளிநாடுகளில் நடத்தலாம் என்று முடிவு செய்து வருகிறது.

ipl

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் வீடு திரும்பி இருக்கும் இவ்வேளையில் அவர்கள் தங்களது அனுபவங்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆர்சிபி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சாஹல் ஐபிஎல் தொடர் நிறுத்தப்படவில்லை என்றால் நானே பாதியில் விலகி இருப்பேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் நான் விளையாடி வந்த போது இம்மாத துவக்கத்தில் எனது பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் இருக்கும் எனது தாய் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு கஷ்டத்தில் இருக்கும்போது நான் ஆட்டத்தின் மீது கவனத்தைச் செலுத்துவது கடினம்.

chahal 1

என் பெற்றோருக்கு மே 3ஆம் தேதி கொரோனா உறுதிசெய்யப்பட்டது நல்லவேளை இந்த தொடரானது அதற்கடுத்த இரண்டு நாட்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இல்லையெனில் நானே இந்த தொடரில் இருந்து பாதியில் விலகி இருப்பேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எனது தந்தைக்கு ஆக்சிஜன் லேவெல் 85-86 குறைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

Chahal-2

பின்னர் தற்போது வீடு திரும்பிய அவர் தற்போது ஆக்சிஜன் அளவு அதிகரித்தாலும் கொரோனா பாசிட்டிவ் என்று தான் இருக்கிறது. அவர் குணமடைய இன்னும் 10 நாட்கள் வரை ஆகும் என்று தனது சோகத்தை சாஹல் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement