எனக்கே இது நடக்குன்னு தெரியாது. 10-15 நிமிஷத்துக்கு முன்னாடி தான் தெரியும் – ஆட்டநாயகன் சாஹல் பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் நேற்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

INDvsAUS

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் 51 ரன்களையும், இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தும் அசத்தினர். மொத்தத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் பின்ச் மற்றும் ஷார்ட் ஆகியோர் முறையே 35, 34 ரன்கள் அடித்தன.ர் இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோன்று ஜடேஜாவுக்கு பதிலாக பந்துவீசிய சாஹல் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டி20 தொடரில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Jadeja

இந்நிலையில் போட்டி முடிந்து ஜடேஜாவுக்கு பதிலாக களம் இறங்கி விளையாடிய ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்ற சாஹல் இந்த ஆட்டம் குறித்து கூறுகையில் : நான் பல போட்டிகளில் மனதளவில் உறுதியாக இருந்து விளையாடி உள்ளேன். ஆனால் இந்த போட்டியில் நான் விளையாடப் போகிறேன் என்று முதல் பாதி முடிந்து பத்து பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் தெரியவந்தது. நான் விளையாடப் போகிறேன் என்று தெரிந்ததும் நான் தயாராகிவிட்டேன்.

Chahal

அதன்பிறகு ஆடம் ஜாம்பா இந்திய அணி வீரர்களுக்கு எதிராக எவ்வாறு பந்து வீசினாரோ அதே போன்று நானும் பந்துவீச முயற்சித்தேன். முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச்சு ஒத்துழைத்தது. இந்த மைதானத்தில் 150 முதல் 160 போதுமான டார்கெட் ஆக இருக்கும் என்று கருதினேன். என்னுடைய திட்டங்களுக்கு ஏற்ப நான் சரியாக பந்து வீசியதால் விக்கெட்டுகளும் கிடைத்தது என சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement