முன்னாடி மாதிரி என்னால பந்தை கிரிப் செய்து சரியா பந்துவீச முடியல – சக வீரர்களிடமே புலம்பிய நச்சத்திர பவுலர்

Chahal-2
- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடரின் முதல் போட்டியில் நேற்று நடந்த முடிந்தது. மும்பை மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற மும்பை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். பேட் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் அடித்து 160 ரன்களை இலக்காக வைத்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக க்றிஸ் லின் 49 ரன்கள் அடித்தார், அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 31 மற்றும் இஷான் கிஷன் 28 ரன்கள் எடுத்தனர்.

RcbvsMi-1

- Advertisement -

அதன் பின்னர் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி பாலில் ஒரு ரன் அடித்து வெற்றி பெற்றது.பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 48 ரன்கள் அடித்தார், அவரைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் 39 மற்றும் கோலி 33 ரன்கள் அடித்தனர். பெங்களூரு பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் நேற்று சிறப்பாக பந்து வீசியது ஹர்ஷல் பட்டேல் தான். 4 ஓவர்களை வீசி வெறும் 27 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மறு முனையில் ஜேமிசன் 4 ஓவர்களை வீசி 27 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி வெறும் 22 ரன்கள் மட்டும் கொடுத்தார். இவர்கள் எல்லாம் ஒரு பக்கம் நன்றாக பந்து வீசி வந்த நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் சாஹால் நேற்று 4 ஓவர்களை வீசி 41 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் அனைவரையும் ஏமாற்றினார்.

chahal

ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே சாஹால் சொதப்பி கொண்டே இரண்டு வருகிறார். 2 வருடங்களாகவே அவர் ஒரே மாதிரியே பந்து வீசி வருகிறார் என்று கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது. ஸ்பின் பவுலர்களைப் பொறுத்தவரையில் நிச்சயமாக புதுப்புது வெரைட்டியான பந்துகளை வீச வேண்டும், ஆனால் சாஹால் ஒரே மாதிரியான பந்துகளை வீசி வருவதன் மூலம் அவரை எல்லோரும் மிக எளிதில் எதிர்கொண்டு வருகின்றனர்.

Chahal 1

நேற்றைய போட்டியில் நான்கு ஓவரை வீசி முடித்தவுடன் பவுண்டரி லைனில் நின்று கொண்டு, தன்னால் சரியாக போட முடியவில்லை என்றும் பழைய படி பந்தை சரியாக பிடித்து கிரிப்பாக பிடித்து போட முடியவில்லை என்றும் தனது சக பெங்களூரு அணி வீரர்களுடன் புலம்பி உள்ளதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூறியுள்ளனர். பெங்களூரு ரசிகர்களும் சாஹல் இனிவரும் போட்டிகளில் பழையபடி பந்துவீச வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கூறிக்கொண்டு வருகின்றனர்.

Advertisement