இது என்ன கூக்ளி எனக்கே புரியல ? எங்கே போனது ? ஆர்.சி.பி அணியை வித்தியாசமாக கலாய்த்த – சாஹல் IPL 2020

Chahal

பெங்களூரு அணியின் அனைத்து சமூக வலைதள பக்கங்களின் கணக்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று இருந்த பெயர் தற்போது ராயல் சாலஞ்சர்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து வலைத்தளத்திலும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பேரை மட்டும்தான் மாற்றினார்கள் என்று பார்த்தால் பக்கங்களிண் ப்ரொபைல் பிச்சர், கவர் பிச்சர் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பக்கங்களில் இருந்த பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதனைக்கண்ட பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கடும் கோபம் அடைந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ஆர்.சி.பி அணியின் வீரருமான சாஹல் தனது பங்கிற்கு கலாய்த்துள்ளார். இதுகுறித்து சாஹல் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் இது என்ன கூக்ளி ? எங்கேபோனது புகைப்படமும், பதிவுகளும் என்று கலாய்த்துள்ளார்.