சிங்கத்திற்கும், கோலிக்கும் இது ஒன்னு தான் வித்தியாசம். ஆர்.சி.பி அணியின் டிவீட்டிற்கு விமரிசையான பதிலளித்த சாஹல்

Chahal
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து தற்போது 2020 ஆம் ஆண்டுக்கான பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Rcb

- Advertisement -

மேலும் இந்த தொடரை யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலியின் புகைப்படத்தையும், ஒரு சிங்கத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டு இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டது.

நேற்று உலக சிங்க தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு ஆர்சிபி அணி இந்த புகைப்படத்தை பதிவிட்டு கேள்வியை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த பதிவிற்கு பதில் அளித்த ஆர்சிபி அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் வழக்கம் போலவே தனது நகைச்சுவை பாணியில் பதில் கொடுத்தார்.

அதாவது முதலில் உள்ள படத்தில் சிங்கம் ஆடை அணிந்து உள்ளதாகவும், இரண்டாவது உள்ள படத்தில் சிங்கம் ஆடை அணியாமல் நிற்கிறது என்று தன் அணியின் கேப்டன் கோலிக்கும், சிங்கத்திற்கும் இடையிலான வித்தியாசங்களை விமர்சையாக கூறியுள்ளார் சாஹல்.

அவரின் இந்த பதில் ரசிகர்கள் இடையே ஆர்வத்தை அதிகரித்தது. மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கமெண்டுகளாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement