டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் சாதனையை முறியடித்து முன்னேறிய யுஸ்வேந்திர சாஹல் – விவரம் இதோ

Chahal
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் வரும் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 44 ரன்களை விட்டுக்கொடுத்து ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், இந்திய டி20 அணிக்காக அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரராக இருந்த ஜஸ்பரீத் பும்ராவின் சாதனையை முறியடித்து, சாஹல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதற்குமுன் இருவரும் தலா 59 விக்கெட்களை வீழ்த்திருந்தார்கள்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சாஹல் 60 விக்கெட்களை கைப்பற்றி இந்திய டி20 அணியின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற பெருமையை பெற்றார். இந்த தொடரில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chahal

பும்ரா அணியில் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பலவீனம் என்றாலும் இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இணைந்துள்ளது பலமாக பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement