டி-ஷர்ட்டை கழட்டி கிரிஸ் கெயிலுடன் பாடி பில்டர் போல போஸ் கொடுத்த சாஹல் – வைரலாகும் புகைப்படம்

Chahal-1

ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

rahul

அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து அவர்கள் 179 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோன்று அதிரடியாக விளையாடிய கெயில் 24 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

அதனை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 145 ரன்கள் அடித்து மட்டுமே அடித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பாக கோலி 35 ரன்களும், படிதார் மற்றும் ஹர்ஷல் பட்டேல் 31 ரன்கள் குவித்தனர். பஞ்சாப் அணி சார்பாக ஹர்ப்ரீட் பிரார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

harpreet 1

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்பு இரு அணி வீரர்களும் மைதானத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கிறிஸ் கெயில் தன்னுடைய ஜெர்சியை கழட்டி தனது உடலை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். இதை கவனித்த பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹலும் அவரின் அருகில் வந்து தன்னுடைய ஜெர்சியை கழட்டி போஸ் கொடுத்தார்.

- Advertisement -

chahal

இவர்கள் இருவரும் பாடி பில்டர்களை போல கொடுத்த போஸ் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மிக பிரம்மாண்டமான உடலமைப்பைக் கொண்ட கெயிலின் அருகில் ஒல்லியான தேகத்தை உடைய சாஹல் பாடிபில்டர் போல போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை கவரும் விதமாக அமைந்திருப்பதால் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.