60 ஆண்டு கிரிக்கெட். 7000 விக்கெட்டுகள். 85 வயதில் ஓய்வு – அதிரவைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

Cecil
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் தனது ஓய்வு அறிவிப்பை 85 வயதில் அறிவித்துள்ளார். செசில் ரைட் எனும் பெயர் கொண்ட இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் இப்போது ஓய்வு அறிவித்தபோது எல்லோரும் குழம்பிப் போனார்கள். அவர் இப்போதும் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டு போது ஓய்வை அறிவிக்கவில்லை. இப்போதும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார் அவர் யார் என்று முழுவதுமாக பார்ப்போம்.

Cecil 1

- Advertisement -

சாமுவேல் செசில் ரைட் என்பதே இவர் முழு பெயர். இவர் ஜமைக்கா கிரிக்கெட் அணிக்காக 1959 ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தொடங்கினார். மற்றபடி அவர் ஆடிய அனைத்து போட்டியிலும் சர்வதேச போட்டிகள் அல்லாத உள்ளூர் போட்டிகள் தான். ஆனால் 1950ஆம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், ஹால் மற்றும் சோபர்ஸ் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

எனினும் இவருக்கு சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு இங்கிலாந்து சென்ற அவர் இங்கிலாந்தில் உள்ளூர் போட்டியில் ஆடி பின்னர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். இதுவரை சுமார் 60 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி 7 ஆயிரத்துக்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என கூறப்படுகிறது. இது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது மேலும் தற்போது 85 வயதாகும் அவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் ஆடி வருகிறார்.

Cecil 2

இந்த மிகப்பெரிய சாதனையை ஐசிசி அங்கீகரிக்குமா? என தெரியவில்லை இருப்பினும் 60 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவதற்கு பாரம்பரிய உணவுகளை உண்பதால் தான் விளையாட முடிகிறது என்று அவர் கூறுகிறார். மேலும் மது அருந்தும் பழக்கம் தனக்கு இல்லை என்றும் அப்படி குடிக்க வேண்டுமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டு பீர் தான் அடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement