- Advertisement -
உலக கிரிக்கெட்

ஹெல்மெட்டை பந்து போல தூக்கிப் போட்டு பேட்டால் அடித்து நொறுக்கிய வெ.இ வீரர்.. காரணம் என்ன?

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கார்லஸ் பிரத்வெய்ட் கடந்த 2016 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்தவர். இருப்பினும் அதன் பின் தடுமாற்றமாக விளையாடிய அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைக்கவில்லை. அதே போல ஐபிஎல் போன்ற பெரும்பாலான டி20 தொடர்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த சூழ்நிலையில் அவர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி10 உள்ளூர் தொடரில் விளையாடினார். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கிராண்ட் ஜாகுவார்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் 10 ஓவரில் 104/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரன்டன் மெக்முலன் 18 (8), மிட்சேல் ஓவன் 22 (10), திசாரா பெரேரா 16 )7) ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

தவறான தீர்ப்பு:

கிராண்ட் ஜாகுவார் சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் லிட்டில், சிக்கந்தர் ராசா, ஜேக் லின்டோட் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய கிராண்ட் ஜாகுவார்ஸ் அணி 10 ஓவரில் 96/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 35, சிக்கந்தர் ராசா 27 ரன்கள் எடுத்தனர். அதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூயார்க் சார்பில் அதிகபட்சமாக அன்ஸ் பட்டேல் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணிக்காக விளையாடிய கார்லஸ் பிரத்வெயிட் 8வது இடத்தில் பேட்டிங் செய்தார். அந்த வாய்ப்பில் ஒரு சிக்சரை பறக்க விட்ட அவர் 7 (5) ரன்களில் இருந்த போது அயர்லாந்து வீரர் ஜோஸ் லிட்டில் வீசிய பவுன்சர் பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதை தவற விட்ட அவருடைய தோளில் பட்ட பந்து விக்கெட் கீப்பர் கையில் தஞ்சமடைந்தது.

- Advertisement -

நொறுங்கிய ஹெல்மெட்:

அப்போது ஜோஸ்வா லிட்டில் அவுட் கேட்டார். அதை சரியாக கவனிக்காத நடுவரும் உடனடியாக அவுட் வழங்கியதால் பிரட்வெய்ட் பரிதாபமாக வெளியேறினார். ஆனால் தனக்கு அநீதியான தீர்ப்பு வழங்கப்பட்டதால் கோபமடைந்த அவர் பவுண்டரி எல்லை அருகே சென்ற போது தம்முடைய ஹெல்மெட்டை கழற்றி பந்து போல தூக்கிப்போட்டு பேட்டால் அடித்து நொறுக்கினார்.

இதையும் படிங்க: ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. இந்தியாவின் 48 வருட மோசமான உலக சாதனையை பகிர்ந்த கொண்ட பாகிஸ்தான்

அவர் அப்படி கோபத்தால் அடித்து நொறுக்கியதை அருகில் நின்று பார்த்த மற்றொரு வீரர் தெறித்து ஓடினார். மறுபுறம் அவரிடம் வாங்கிய அடியால் காற்றில் பறந்த ஹெல்மெட் 10 அடிகள் தாண்டி பெவிலியனில் பவுண்டரி போல சென்று விழுந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -