கேப்டன் கிங் ! ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த டாப் 4 கேப்டன்கள்

Rohith-2
- Advertisement -

ஐபிஎல் தொடர் சர்வதேச அளவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு நிகரான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த தொடரில் தரமான இந்திய வீரர்களும் புதுமையான இளம் வீரர்களும் தேவைக்கேற்ப வெளிநாட்டு வீரர்களும் சேர்ந்து விளையாடுவதால் ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரு அணிகளும் சம அளவில் கடுமையாக முழு மூச்சை கொடுத்து போராடுகின்றன. அதனால் இத்தொடரின் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவரில் தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பரபரப்பான அதேசமயம் அழுத்தம் நிறைந்த இந்த தொடரில் ஒரு அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிப் பாதையில் நடக்க வைப்பது ஒரு கேப்டனுக்கு சவாலான காரியமாகும்.

Shane Warne Rajasthan Royals RR IPL 2008

- Advertisement -

அணியில் 20 – 25 வீரர்கள் இருக்கும் நிலையில் அதில் திறமையை கண்டறிந்து இளம் வீரர்களுக்கும், தரத்தை கண்டறிந்து தேவையான வெளிநாட்டு வீரர்களுக்கும், வெற்றி பெறும் அளவுக்கு இதர வீரர்களுக்கும் வாய்ப்பளித்து தரமான 11 பேர் அணியை கேப்டன் சரியாக தேர்வு செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். மேலும் களத்தில் பந்து வீசும்போது எந்த பவுலர்களை எப்போது பயன்படுத்த வேண்டும் சேசிங் செய்யும் போது எந்த பேட்ஸ்மேனை எந்த இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்ப வேண்டும் என்பது போன்ற முடிவுகளுடன் வெற்றியை தீர்மானிக்கும் டிஆர்எஸ் ரிவ்யூ எடுப்பது என ஐபிஎல் தொடரில் கேப்டனின் வேலை மிகக் கடினமான ஒன்றாகும்.

இவை அனைத்தையும் சரியாக செய்து அணி வீரர்களை ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக வெற்றிப்பாதையில் நடத்தினால் மட்டுமே லீக் சுற்றைத் தாண்டி பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கும் கேப்டன்கள் லீக் சுற்றை விட நாக் அவுட் சுற்றில் தான் மிகவும் விழிப்பாக இருந்து அணியை வழிநடத்த வேண்டும். இல்லையெனில் தோல்வியடைந்து அதோடு வெளியேறிவிட வேண்டும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் கடினமான பிளே ஆப் போட்டிகளில் (பைனல் உட்பட) அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த டாப் 4 கேப்டன்களை பற்றி பார்ப்போம்.

4. டேவிட் வார்னர் 4: கடந்த 2015 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்திய ஆஸ்திரேலிய நட்சத்திரம் டேவிட் வார்னர் 2018 தவிர 2021 வரை தனது அதிரடியான பேட்டிங் மற்றும் சிறப்பான வழி நடத்தல் காரணமாக அந்த அணிக்கு பல வெற்றிகளை தேடிக் கொடுத்தார்.

- Advertisement -

பேட்டிங்கில் மலைபோல ரன்களைக் குவித்து 3 ஆரஞ்சு தொப்பிகளை வென்று கொடுத்த அவர் 2016இல் அற்புதமாக கேப்டன்ஷிப் செய்து இறுதிப் போட்டியிலும் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அந்த சீசனில் எலிமினேட்டர், குவாலிபயர் 2, பைனல் என 3 பிளே ஆப் போட்டிகளில் வென்ற அவர் மொத்தமாக 4 வெற்றிகளை பதிவு செய்து இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

Gambhir

3. கெளதம் கம்பீர் 5: இந்தியா 2007, 2011 ஆகிய வருடங்களில் உலகக் கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செய்யப்பட்ட கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான பேட்டிங் மட்டுமல்லாமல் கொல்கத்தா அணியை வழி நடத்தி தனது கேப்டன்ஷிப் திறமையையும் வெளிப்படுத்தியவர். 2012இல் முதல் முறையாக அவர் தலைமையில் அட்டகாசமாக செயல்பட்ட கொல்கத்தா பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் வென்று நேரடியாக பைனலுக்கு சென்று சென்னையை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

அதேபோல் 2014 சீசனில் லீக் சுற்றில் அசத்தி பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை தோற்கடித்து பின் மீண்டும் இறுதிப் போட்டியில் பஞ்சாப்பை தோற்கடித்து 2-வது கோப்பையை வென்றது. மொத்தமாக நாக் அவுட் போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ள அவர் இப்படி 3-வது இடம் பிடித்து ஐபிஎல் வரலாற்றில் 3-வது வெற்றிகரமான கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளார்.

Rohith

2. ரோஹித் சர்மா 10: 2008 – 2010 வரை ஜாம்பவான் சச்சின் தலைமையில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவித்த மும்பைக்கு 2013இல் கேப்டனாக பாதியில் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு வருடமும் சூறாவளியாக சொல்லி அடித்த அந்த அணி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அந்த 5 பைனல் உட்பட மொத்தம் பிளே ஆப் சுற்றில் 10 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள அவர் இப்பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். அதன் காரணமாக வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் இன்று 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாகும் அளவுக்கு இமாலய வளர்ச்சி கொண்டுள்ளார்.

1. எம்எஸ் தோனி 15: எம்எஸ் தோனி என்பவர் கேப்டன்ஷிப் செய்வதற்காகவே பிறந்தவர் என்று தனது மாணவனை முன்னாள் ஜாம்பவான் கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டும் அளவுக்கு இந்தியாவிற்காகவும் ஐபிஎல் தொடரிலும் கிரிக்கெட்டில் உள்ள அத்தனை கோப்பைகளையும் வென்று காட்டிய தோனி வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். அவர் தலைமையில் 13 சீசன்களில் பங்கேற்ற சென்னை 11 வருடங்களில் பிளே-ஆப் சுற்றுக்கு சென்று 9 பைனல்களில் விளையாடி 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது.

கோப்பைகளின் அடிப்படையில் ரோகித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக இருந்தாலும் போட்டிகளின் அடிப்படையிலும் அதிக முறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது அடிப்படையிலும் தோனி தான் அன்றும் இன்றும் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக ஜொலிக்கிறார். அப்படிப்பட்ட மகத்தான அவர் 24 பிளே ஆஃப் போட்டிகளில் 15 வெற்றிகளை பெற்று ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ப்ளே ஆஃப் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்தவர் அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர் என்ற 2 சாதனைகளையும் ஒன்று சேர படைத்துள்ளார்.

Advertisement