கேப்டன்சியில் ரிஷப் பண்ட் செய்த தவறுகளும், சாம்சன் செய்த சிறப்பான சம்பவங்களும் – விவரம் இதோ

Samson

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியானது ஐபிஎல் தொடரின் லீக் போட்டி என்பதை தாண்டி கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்ட 2 இளம் வீரர்களின் கேப்டன்சியின் தன்மையை பரிசோதிக்கும் போட்டியாகவே பார்க்கப்பட்டது. ஒற்றுமை என்னவென்றால் இருவருமே விக்கெட் கீப்பர்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இளம் வீரரான சஞ்சு சாம்சனும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மற்றொரு இளம் வீரரான ரிஷப் பன்ட்டும் வழிநடத்திச் சென்றனர். இந்தப்போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Samson-Pant

எதிரணியின் பலவீனத்தை சரியாக புரிந்து கொண்ட சஞ்சு சாம்சன் தனது அணியில் 3 இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. உனத்கட் 3 விக்கெட், ரஹ்மான் 2 விக்கெட் என விக்கெட் வேட்டையாடினர் இந்த இடது கை பாஸ்ட் பவுலர்கள். ஆனால் ரிஷப் பண்ட்டோ நல்ல தரமான பேட்டிங் பிட்ச் என்று தெரிந்தும் ஷிம்ரன் ஹெட்மையரை பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு காகிசோ ரபாடாவை உள்ளே கொண்டு வந்தார். காகிசோ ரபாடா டெல்லி அணியின் பிரதான பாஸ்ட் பௌலர்தான் தான், ஆனால் அவரை உள்ளே கொண்டு வருவதற்கு டாம் கரணை பெஞ்சில் உட்கார வைத்து இருக்கலாம்.

ஆனால் ரிஷப் பண்ட், ஹெட்மையரை உட்கார வைத்துவிட்டு டாம் கரணை உள்ளே கொண்டு வந்தார். டாம் கரன் கடந்த போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியிலும் 3.4 ஓவர்கள் வீசி 35 ரன்களை வாரி வழங்கினார் டாம் கரண். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது சதமடித்து, ஒரு கேப்டனாக தனது பேட்டிங்கை ஏற்கனவே நிரூபித்துவிட்டார் சஞ்சு சாம்சன்.

RR

ரிஷப் பண்ட்டும் அதற்கு சற்றும் குறைவில்லாத ஒரு இன்னிங்சை இந்த போட்டியில் ஆடினார். தொடக்க ஆட்டக்காரர்கள் மிக விரைவாக வெளியேற சூழ்நிலையை புரிந்து கொண்ட ரிஷப் பண்ட், நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்த போட்டியில் அவர் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். பௌலர்களை ரொட்டேட் செய்வது, ஃபீல்டிங்கை மாற்றி அமைப்பது மற்றும் விக்கெட் கீப்பிங் என அனைத்திலும் மாஸ் காட்டினார் சஞ்சு சாம்சன்.

- Advertisement -

ஆனால் ரிஷப் பன்ட்டோ சிறப்பாக பந்து வீசி வந்த அஸ்வினுக்கு 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு தந்தார். அவருக்கு மீதமிருந்த ஒரு ஓவரை வீச வாய்ப்பு கொடுக்காமல், மார்கஸ் ஸ்டாய்னிசை பந்துவீச அழைத்துவந்து, அதுவரை இரண்டு பக்கமும் சமமாக சென்றுகொண்டிருந்த போட்டியை மொத்தமாக மாற்றிவிட்டார். மேலும் விக்கெட் கீப்பிங் செய்யும்போது தனது அலட்சியப் போக்கினால் உனத்கட்டின் ரன் அவுட்டை கோட்டை விட்டு, 18-வது ஓவரில் டாட் பால்கள் வீச முடியாதபடி செய்து விட்டார்.

Pant

இதுதான் ரிஷப் பண்ட்டின் கேப்டனாக இரண்டாவது போட்டி. இந்த போட்டியின் மூலம் பாடம் கற்றுக்கொண்டு மேலும் வரவிருக்கும் பல போட்டிகளில் கேப்டன்சியில் தவறு செய்யாமல் இருப்பாரா ரிஷப் பன்ட், பொறுத்திருந்து பார்ப்போம்.