- Advertisement -
உலக கிரிக்கெட்

இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்த சம்பவம் – கனடா அணி மோசமான சாதனை

எதிர்வரும் 2027-ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இரண்டாவது தகுதி சுற்று போட்டிகளில் கடந்து சில தினங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்து மற்றும் கனடா அணிகள் பங்கேற்று விளையாடி இருந்தன. இந்த போட்டி தான் தற்போது அனைவராலும் கவனிக்கப்பட்ட போட்டியாக மாறியுள்ளது.

கனடா அணி நிகழ்த்திய அரிய மோசமான சாதனை :

அப்படி நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடைபெறாத ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுமட்டும் இன்றி இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்த தகவல்கள் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாறியுள்ளன.

- Advertisement -

அந்த வகையில் கனடா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கனடா அணியானது ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 184 ரன்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து விளையாடிய ஸ்காட்லாந்து அணியானது கனடா அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக அவர்களை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது கனடா அணி முதலில் பேட்டிங் செய்கையில் அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறியுள்ளனர்.

- Advertisement -

இந்த போட்டியின் முதல் பந்தில் கனடா அணியை சேர்ந்த துவக்க வீரர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு இரண்டாவது பந்தின் போது எதிர்புறம் இருந்த புதிய பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் கையில் பட்டு ஸ்டம்பில் பட்டதால் ரன் அவுட் மூலம் இரண்டாவது துவக்க வீரரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையும் படிங்க : இன்னும் 6 விக்கெட் போதும்.. முதல் இந்திய வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்போகும் – ஹார்டிக் பாண்டியா

இப்படி சர்வதேச ஒருநாள் போட்டியின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு துவக்க வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை. இப்படி ஒரு அரிதான மோசமான சாதனையை ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக கனடா அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -