- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியின் ரசிகன்.. இதுக்காகவே இந்தியாவுக்கு எதிரா விளையாட பெருமைப்படுறோம்.. கனடா வீரர்கள் பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 15ஆம் தேதி இந்திய நேரப்படி 8 மணிக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் 33வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியா மற்றும் கனடா கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் ஏற்கனவே அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை தோற்கடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது.

மறுபுறம் அயர்லாந்துக்கு எதிராக வென்ற கனடா அணி பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தோற்றது. அதனால் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய அந்த அணி நாடு திரும்புவதற்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்நிலையில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது தாங்கள் பெருமையாக கருதுவதாக கனடா வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

கனடா வீரர்கள் மகிழ்ச்சி:
குறிப்பாக தாம் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன் என்று பாகிஸ்தானில் பிறந்து கனடாவுக்காக விளையாடும் சாத் ஃபின் ஜாபர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி எனக்கு மிகவும் பிடித்தவர். இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டுக்கு அவர் நிறைய செய்துள்ளார்”

“அவர் மீது நான் ரசனையை வைத்துள்ளேன். தற்சமயத்தில் இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக இருக்கிறது. அவர்களுடன் ஒரே மைதானத்தில் களத்தை பகிர்ந்து கொண்டு விளையாடுவது ஆர்வமாகவும் பெருமையாகவும் உள்ளது. அதில் நாங்கள் அசத்தினால் கிரிக்கெட்டில் எங்களுக்கென்று பெயரை எடுப்போம்” என்று கூறினார். அது பற்றி மற்றொரு வீரர் நிக்கோலஸ் கிர்டோன் தெரிவித்தது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலியை பார்க்க விரும்புவேன். உண்மையில் அவர் பிட்ச்சின் இருபுறங்களிலும் அற்புதமாக விளையாடுவார். விராட் கோலியின் கிளாசிக் கவர் ட்ரைவ் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும்” என்று கூறினார். அனைத்து புறங்களிலும் அடிக்கும் சூரியகுமார் யாதவ் பற்றி மற்றொரு கனடா வீரர் ஜெரோமி கோர்டன் தெரிவித்தது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவ் நிற்கும் இடத்திலிருந்து அசால்டாக அடிக்கிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்திய அணியில் அவருக்கு இடம் கூட தரமாட்டாங்க.. பாகிஸ்தானுக்கு அந்த ட்ரிக் தெரியல.. மைக்கேல் வாகன்

இதைத் தொடர்ந்து ஃப்ளோரிடா நகரில் மழை பெய்ததால் இப்போட்டி துவங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. அதனால் டாஸ் வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஒருவேளை இந்தப் போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -