வெறும் 24 சான்ஸ்.. சச்சினின் 100 சதங்கள் உலக சாதனையை தவற விடும் கிங் கோலி? புள்ளிவிவர அலசல்

Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓரளவு நன்றாக விளையாடிய விராட் கோலி 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

அப்போதிலிருந்தே ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு இந்திய பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக்கோப்பை வெற்றியாளரான அவர் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல உதவினார். மேலும் 2024 டி20 உலகக்கோப்பை ஃபைனல், 2025 சாம்பியன்ஸ் ட்ராபி செமி ஃபைனலில் அவர் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார்.

- Advertisement -

2027 வரை 24 வாய்ப்பு:

பேட்டிங் துறையில் ரன் மெஷினாக செயல்பட்டு வந்த அவர் ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பதற்கு பிரகாச வாய்ப்புகள் ஏற்பட்டது. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச 20 போட்டிகளில் ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விடை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதை இலக்காக வைத்துள்ளார்.

2027இல் விராட் கோலி 38 வயதை தாண்டி விடுவார் என்பதால் அதுவே அவருடைய கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். அந்த உலகக் கோப்பையுடன் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவார் என்றே சொல்லலாம். அது போன்ற சூழ்நிலையில் 2027 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா 24 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

- Advertisement -

தவறும் உலக சாதனை:

வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 3 போட்டிகள் வீதம் 24 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. மறுபுறம் விராட் கோலி இதுவரை 82 சதங்கள் அடித்துள்ளார். எனவே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைக்க அவருக்கு இன்னும் 19 சதங்கள் தேவைப்படுகிறது.

எனவே 37 வயதில் 24 போட்டிகளில் விராட் கோலி 19 சதங்கள் அடிப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாகும். சமீப காலங்களாகவே தொடர்ச்சியாக ரன்களையும் சதங்களையும் அடிப்பதில் விராட் கோலி தடுமாறி வருகிறார் என்பதை அனைவரும் அறிவோம். எனவே சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி உடைப்பது மிகவும் கடினம் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் 26 வயதான ஸ்பெஷல் பவுலர் – விவரம் இதோ

இருப்பினும் ஏற்கனவே 51 சதங்கள் அடித்துள்ள விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிகள் மிகவும் பிடித்ததாகும். அது போக 2027 உலகக் கோப்பையில் இந்தியா குறைந்தது 6 – 7 போட்டிகளில் விளையாடும். எனவே அந்த எக்ஸ்ட்ரா வாய்ப்பைப் பயன்படுத்தி விராட் கோலி 100 சதங்களை அடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement