இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் 26 வயதான ஸ்பெஷல் பவுலர் – விவரம் இதோ

Arshdeep Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்த கையோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. அதற்கடுத்து 2025-27 ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் முயற்சியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதன்படி ஜூன் 20-ஆம் தேதி இங்கிலாந்து மண்ணில் துவங்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகும் இந்திய வீரர் :

ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் அவர்களுக்கு பதிலாக இந்த தொடரில் விளையாடப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதோடு சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி எவ்வாறு இந்த தொடரை சமாளிக்கப்போகிறது? என்பது குறித்த கேள்விகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில் இந்த இங்கிலாந்து தொடரில் 26 வயதான வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

- Advertisement -

டி20 போட்டிகளை பொருத்தவரை இந்திய அணியின் ஸ்பெஷல் பவுலராக பார்க்கப்படும் அவர் 63 போட்டிகளில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் இங்கிலாந்தில் அவரது பந்துவீச்சு அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஒத்துப்போகும் என்பதனால் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் சிவப்பு பந்தில் சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் உடையவர்.

இதையும் படிங்க : மேட்ச் நடக்கட்டும் பிரச்சனை இல்ல.. ஆனா இதைமட்டும் பண்ணாதீங்க ப்ளீஸ் – பி.சி.சி.ஐ-யிடம் முறையிட்ட கவாஸ்கர்

எனவே அவருக்கு இந்த இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து திரும்பினாலும் இன்னும் முழு ரிதத்தை பிடிக்கவில்லை எனவே அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement