வீரர்களையும்… ஜெர்சியையும் மாற்றிக்கொள்ளலாம்..!! 6 அதிரடி விதிகளை அறிவித்த ஐபிஎல் நிர்வாகம் !

- Advertisement -

இந்தாண்டு ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள ஐபிஎல்-இல் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.இரண்டாண்டு தடைக்கு பின்னர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-இல் மீண்டும் விளையாட இருப்பதால் ரசிகர்கள் இன்னும் ஆர்வமாக உள்ளனர்.
CSK

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசன் முதல் போட்டியின் விதிகளில் சில மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.மொத்தம் ஆறு மாற்றங்களை செய்துள்ள ஐபிஎல் நிர்வாகம் தற்போது அவை என்ன என்பதை வரிசைப்படுத்தியுள்ளது.

1 முதல்விதி.

- Advertisement -

அவற்றில் முதல் விதியின் படி போட்டிகளின் இடையே சிறு ஓய்வு கேட்கும் திட்டமான ”ஸ்டார்ட்டஜிக் டைம் அவுட்” விதி கடந்த 2009 ஐபிஎல்-இன் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

2009ம் வருடம் 7.30 நிமிடம் வழங்கப்பட்ட ஓய்வு நேரமானது பின்னர் 2010இல் மறு பரிசீலனை செய்யப்பட்டு 2.30 நிமிடமாக்கப்பட்டது. தற்போதைய புதிய விதிமுறையின் படி இந்த திட்டத்தின் கீழ் பேட்டிங் செய்யும் அணியானது 13,14,15,16 ஆகிய ஓவர்களிலும், பந்துவீசிடும் அணியானது 6,7,8,9 ஆகிய ஓவர்களிலும் இந்த ஓய்வை கேட்டு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

2 இரண்டாம் விதி.

இதுவரையிலும் ஒரு அணி உள்ளூர் மற்றும் வெளியூரில் விளையாடி வந்த போட்டிகளில் ஒரே சீருடையை மட்டுமே பயன்படுத்தி விளையாடி வந்தது.

- Advertisement -

ஆனால் இந்த ஐபிஎல் சீசன் முதல் ஒவ்வொரு அணியும் உள்ளூரில் நடைபெறும் போட்டிகளுக்கு ஒரு சீருடையும், வெளியூரில் நடைபெறும் போட்டிகளுக்கு மற்றொரு சீரூடையுமென இரண்டு வகையான சீருடைகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ள அணிகளை இந்த விதிமுறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். அதே வேளையில் இந்த விதிகள் கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
dwayne

3 மூன்றாவது விதி.

மூன்றாம் விதியின் படி ஒரு அணி வாங்கிய வீரரை தேவைப்பட்டால் பணம் கொடுத்து மற்றொரு அணி பாதியில் வாங்கிக்கொள்ளலாம். இதன்படி முன்னதாக ஏலத்தில் கட்டி எடுக்கப்பட்ட தொகையை புதியதாய் வாங்கப்போகும் அணி முன்னால் வாங்கிய அணிக்குரிய பணத்தை செலுத்தி அணி வீரரை வாங்கி கொள்ளலாம்.இப்போதைக்கு இந்த புதிய விதி வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

- Advertisement -

4 நான்காவது விதி.

இந்த விதியின் படி கடந்த ஐபிஎல் சீசன் விதிகளின் படி இரண்டாவது போட்டி சரியாக இரவு 8 மணிக்கு நடைபெறும். ஆனால் இந்த சீசன் முதல் இரண்டாவது போட்டியானது இரவு 7 மணிக்கு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது போட்டி முன்னதாக தொடங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதால் முதல் போட்டியின் நேரமும் மாற்றப்படுமா என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் இதுவரையிலும் இல்லை.

5 ஐந்தாவது விதி.

இந்த விதியின் மூலம் ஐபிஎல் போட்டிகளை இனிமேல் “ஹாட் ஸ்டார்” செயலி மூலம் பார்க்கலாம்.
மேலும் புதியதாக அதில் சேர்க்கப்பட்டுள்ள “விர்சுவல் ரியாலிட்டி” தொழில்நுட்பம் மூலம் நாம் எப்போது வேண்டுமானாலும் கேமராவின் ஆங்கிளை மாற்றி ஆட்டத்தை ரசிக்கலாம்.
mike

6 ஆறாவது விதி.

இந்த ஐபிஎல் சீசன் முதல் டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் இது பழக்கத்திலுள்ளது. ஒரு இன்னிங்ஸின் போது ஒரு அணிக்கு இரண்டு வாய்ப்புகள் இதன்மூலம் வழங்கப்படும்.

ஆனால் இந்தாண்டு முதல் இந்த திட்டம் ஐபிஎல்-இல் நடைமுறைக்கு வந்தாலுமே கூட ஒரு அணி ஒரு இன்னிங்சில் ஒரு முறை மட்டுமே டிஆர்எஸ் முறையை பயன்படுத்த முடியும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய விதிகளின் படி ஐபிஎல் இன்னும் சூடு பிடிக்குமா என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement