வீரர் செய்த மோசமான செயல் ! வசமாக மாட்டிக்கொண்ட வீரர் ! எச்சரித்த நடுவர்கள்- வீடியோ உள்ளே

ball
- Advertisement -

தற்போது தென்ஆப்பிரிக்க — ஆஸ்திரேலியா அணிகளிடையேயான டெஸ்ட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது.இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கேப்டவுனில் நடைபெற்று வருகின்றது.இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்ஆப்பிரிக்க அணி 311 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
CameronBancroft

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 255 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.மூன்றாவது நாளில் தென்ஆப்பிரிக்க அணி தனதுஇரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. நேற்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 238 ரன்களை எடுத்துள்ளது.

- Advertisement -

நேற்றைய தினத்தின் போது பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு அடிக்கடி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. பின்னர் அவர் ஆட்டத்தின் நடுநடுவே தன் பேன்டிற்குள் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை எடுத்து பந்தில் தேய்க்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது.

பின்னர் இந்த புகார் நடுவர்களிடம் சென்றது. நடுவர்கள் விசாரித்த பின் பந்தை திட்டமிட்டே சேதப்டுத்தியது தெரியவந்தது.இனிமேல் ஐசிசி நடுவர்கள் இந்த புகாரின் மேல் விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போட்டியின் நடுவர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement