நடந்து வரும் ஐபிள் போட்டியில் பெங்களூர் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் அந்த அணி பிலே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெரும் வாய்ப்பு மிகவும் கடினமாக ஆகிவிட்டது.
இந்நிலையில் பெங்களூர் அணியை இதுவரை ஆதரித்து வந்த பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்று தற்போது செய்துள்ள காரியம் இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
இந்த ஐபில் தொடங்கிய நாள் முதலே பெங்களூர் அணி ரசிகர்கள் அனைவராலும் பேசப்பட்ட வசனம் என்னவென்றால் “இ சாலா கப் நம்தே ” அதாவது இந்த வருடம் கோப்பை நமக்குத்தான் என்ற வசனம் தான். ஒவ்வொரு பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்களும் அந்த வாங்கியத்தை கூவி தங்கள் அணி வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் பெங்களூர் வி வி சாலையில் அமைந்துள்ள “ஹர்ஷ் கஃபே” என்ற ஹோட்டல் நிர்வாகம் பெங்களூரு அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் , பெங்களூரு ரசிகர்களை கவரும் வகையிலும் தங்களது ஹோட்டல் ரசிதில் “இ சாலா கப் நம்தே” என்ற வசனத்தை பதித்திருந்தனர்.இந்த நிலையில் தற்போது பெங்களூரு அணிக்கு இந்த ஆண்டு ஐபில் தொடரில் பிலே ஆப் சுற்றில் கூட நுழைவது கஷ்டம் என்று புரிந்து கொண்ட அந்த ஹோட்டல் நிர்வாகம் தற்போது அந்த வாக்கியத்தை அவர்களது ஹோட்டல் ரசித்துகளிருந்து எடுத்துவிட்டனர்.
Next sala cup namde pic.twitter.com/ZjiIl3QmEw
— Gaddappa (@centurygowdaa) May 1, 2018
தற்போது அந்த ரசிதுகளில் “நெக்ஸ்ட் சாலா கப் நம்தே” அதாவது “அடுத்த ஆண்டு கோப்பை நமதே ” என்று மாற்றியுள்ளனர்.இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவ மற்ற ரசிகர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர், மேலும் இந்த விஷயத்தை நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டல் செய்து வருகின்றனர்.