கடவுள் எனக்கு அந்த ஆன்மீக சக்திய கொடுத்துருக்காரு.. இந்திய மக்களுக்காகவே அதை தாங்கிகிட்டேன்.. புஜாரா பேட்டி

C Pujara 7
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் செட்டேஸ்வர் புஜாரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 2010 – 2023 வரையிலான காலகட்டங்களில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்களை அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 2 டெஸ்ட் தொடர்களை வெல்ல அவர் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

முதல் தொடரில் அதிக ரன்கள் அடித்த அவர் தொடர்நாயகன் விருது வென்று விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா தொடரை வெல்ல உதவினார். அதற்கடுத்த தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட அவர் 2வது அதிக ரன்கள் அடித்து ரகானே தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல உதவியினார். குறிப்பாக சிட்னி மற்றும் காபாவில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலிய பவுலர்கள் அவருடைய விக்கெட்டை எடுக்கத் தடுமாறினார்கள்.

- Advertisement -

இந்திய மக்களுக்காக:

அதனால் உடலை குறிவைத்து பவுலிங் செய்த ஆஸ்திரேலிய பவுலர்கள் புஜாராவை காயமடைய வைத்து வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால் அந்த பந்துகளை தம்முடைய உடலில் அடிகளாக வாங்கி தடுத்த புஜாரா இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினர். இந்நிலையில் கோடிகணக்கான இந்திய மக்களுக்காகவே ஆஸ்திரேலியாவில் உடம்பில் அடி வாங்கியதாக புஜாரா கூறியுள்ளார்.

எவ்வளவு அடி வாங்கினாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை கடவுள் தமக்கு கொடுத்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இது பற்றி புஜாரா பேசியது பின்வருமாறு. “அது போன்ற தருணங்களில் நீங்கள் பெரிய திரையைப் பார்க்க வேண்டும். அதாவது நீங்கள் உங்களுடைய அணிக்காக பேட்டிங் செய்கிறீர்கள், பில்லியன் கணக்கான மக்கள் உங்களைப் பார்க்கிறார்கள்”

- Advertisement -

கடவுள் வழங்கிய பலம்:

“மேலும் நீங்கள் சிறப்பாக விளையாடி தொடரை வெற்றி பெற வைக்க மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். நீங்கள் உடலில் அடி வாங்கும் போது சிதைந்து விடுவீர்கள். ஆனால் அப்போது தான் நீங்கள் உங்களுடைய அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். உங்களையும் ஆட்டத்தையும் திறனையும் நீங்கள் நம்ப வேண்டும்”

இதையும் படிங்க: 14 போர்ஸ் 7 சிக்ஸ் 121 ரன்ஸ்.. கடைசி பந்தில் சிக்ஸ்.. கம்பீரை எச்சரித்த சஞ்சு சாம்சன்.. கொச்சி மாஸ் வெற்றி

“உடலில் ஓரிரு முறை அடி வாங்குவது பரவாயில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அடி வாங்கினால் தாங்க முடியாத வலி ஏற்படும். அங்கே தான் உங்களுடைய மனதளவிலான உறுதித்தன்மை செயல்பட வேண்டும். அங்கே தான் நாட்டின் மீது உங்களுக்கு இருக்கும் காதலும் அர்ப்பணிப்பும் வெளிப்பட வேண்டும். கடவுள் எனக்கு அந்த பலத்தைக் கொடுத்துள்ளதாக நம்புகிறேன். கடினமான நேரங்களில் உங்களுக்கு ஆன்மீக சக்தி தேவைப்படும். அது மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அந்த பலம் எனக்கு கிடைத்தது, அதை விவரிக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement