14 போர்ஸ் 7 சிக்ஸ் 121 ரன்ஸ்.. கடைசி பந்தில் சிக்ஸ்.. கம்பீரை எச்சரித்த சஞ்சு சாம்சன்.. கொச்சி மாஸ் வெற்றி

- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை கழற்றி விட்ட தேர்வுக்குழுவினர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்தது. அதன் காரணமாக ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ள அபிஷேக் ஷர்மாவுடன் ஓப்பனிங் ஜோடியாக சுப்மன் கில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

அதன் காரணமாக சமீபத்திய தொடர்களில் ஓப்பனிங்கில் களமிறங்கி 3 சதங்கள் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட உள்ளார். அதனால் அவருடைய டி20 கேரியர் கேள்விக்குறியாக நிற்கிறது என்றே சொல்லலாம். இந்த சூழ்நிலையில் கேரளாவில் 2025 கேரள கிரிக்கெட் டி20 லீக் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

42 பந்தில் சதம்:

அந்தத் தொடரில் ஆகஸ்ட் 24ஆம் தேதி திருவனந்தபுரத்தில் 8வது போட்டி நடைபெற்றது. அதில் கொச்சி டைகர்ஸ் மற்றும் கொல்லம் செய்லர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற கொச்சி முதலில் முதலில் பவுலிங் செய்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்லம் அணி 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 236/5 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் சச்சின் பேபி 91, விஷ்ணு வினோத் 94 ரன்கள் அடித்து அசத்தினார்கள். கொச்சி அணிக்கு அதிகபட்சமாக ஜெரின் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய கொச்சி அணிக்கு சஞ்சு சாம்சன் ஓபனிங்கில் விளையாடி அதிரடியாக பேட்டிங் செய்தார். எதிர்ப்புறம் மனோகரன் 11 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் சாம்சன் சிறப்பாக விளையாடி சத்தத்தை அடித்தார்.

- Advertisement -

கம்பீருக்கு எச்சரிக்கை:

இந்தப் பக்கம் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த முகமது சானு 39 ரன்னில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் கேப்டன் சாலி சாம்சன் 5, நிகில் தொட்டா 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் மறுபுறம் தொடர்ந்து மிரட்டிய சாம்சன் 42 பந்துகளில் சதத்தை அடித்து 14 பவுண்டரி 7 சிக்ஸர்களை பறக்க விட்டு 121 (51) ரன்களை 237.25 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார்.

கடந்தப் போட்டியில் மிடில் ஆடரில் களமிறங்கிய அவர் 13 (22) ரன்களில் அவுட்டானார். ஆனால் இப்போட்டியில் மீண்டும் ஓப்பனிங்கில் சதத்தை அடித்த அவர் தன்னை இந்திய அணியில் பெஞ்சில் அமர வைக்க முடிவெடுத்துள்ள பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பதிலடியும் எச்சரிக்கையும் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் லோயர் மிடில் ஆர்டரில் முகமது ஆசிக் அதிரடி காட்டினார்.

இதையும் படிங்க: 2013லயே தோனி கீப்பிங் பிராக்டீஸை விட்டும்.. மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்ய இதான் காரணம்.. ஸ்ரீதர் பேட்டி

அவருடைய அதிரடியால் வெற்றியை நெருங்கிய கொச்சிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. சபாருதீன் வீசிய அந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் ஆசிக் 4, 6, 1 ரன்கள் எடுத்தார். 4வது பந்தில் டபுள் எடுக்க முயற்சித்த போது எதிர்ப்புறம் இருந்த பிரான்சிஸ் ஜான் 7 ரன்னில் அவுட்டானார். 5வது பந்தில் ரன் எடுக்காத ஆசிக் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது மிரட்டலான சிக்ஸர் அடித்தார். அதனால் 45* (18) ரன்கள் விளாசிய அவர் கொச்சியை 4 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற வைத்தார்.

Advertisement