விவோ விலகியதை அடுத்து ஐ.பி.எல் தொடரின் புதிய டைட்டில் ஸ்பான்சர் இவங்கதானம் – வெளியான தகவல் இதோ

ipl
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் போட்டி தொடர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 12 சீசன்களில் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 13 வது சீசன் பல்வேறு தடைகளைக் கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது.

Ipl cup

- Advertisement -

இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சீன ஸ்பான்சர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வந்தன.

ஏற்கனவே சீன நிறுவனமான விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக 2025 ஆம் ஆண்டு வரை பெரிய தொகை கொடுத்து பெற்றிருந்தது. மேலும் ஒரு ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை பிசிசிஐக்கு மூலமாக வருமானம் கிடைத்து வந்தது. இந்நிலையில் தற்போது சீன பொருட்களையும் சீன நிறுவனங்களையும் இந்தியாவில் புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் வலுத்து வந்தன.

இந்த காரணத்தினால் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் மன்றக் குழுவில் ஸ்பான்சராக விவோ தொடரும் என்று கூறப்பட்டது. ஆனால் நாடு முழுக்க ரசிகர்கள் கடும் கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தினர். இதன் காரணமாக மீண்டும் ஸ்பான்சர்ஷிப் இல் மறுபரிசீலனை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தற்போது விவோ நிறுவனம் தானாக அதிலிருந்து விலகி உள்ளது. இதனால் பிசிசிஐக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறாமல் போயிருப்பின் ரூபாய் 4000 கோடி வரை பிசிசிஐக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட இருந்தது குறிப்பிடத்தக்கது.

Byjus

இந்நிலையில் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஆன்லைன் கல்வி செயலியான பைஜூஸ் நிறுவனமும் , குளிர்பான நிறுவனமான கோகோ கோலாவுக்கும் இடையே போட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பைஜூஸ் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக 300 கோடி கொடுத்து பெற தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணி ஸ்பான்சராக அந்நிறுவனம் இருப்பதால் அவர்களே டைட்டில் ஸ்பான்சராக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் ஜியோ மற்றும் அமேசான் ஆகியோரும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement