படிக்கலின் ஷூ லேஸை கட்டி விட்ட ஜாஸ் பட்லர். இதாங்க “ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்”

Padikkal
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டி நேற்று விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 177 ரன்களை குவிக்க 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 21 பந்துகளில் மிச்சம் இருக்கையில் படிக்கல் 101 ரன்களும், விராட் கோலி 72 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இந்த தொடரில் பெங்களூரு அணி நேற்று பெற்ற வெற்றியோடு சேர்த்து தொடர்ச்சியாக 4 போட்டிகளில் கைப்பற்றி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ஜாஸ் பட்லர் பெங்களூர் அணியின் துவக்க வீரர் படிக்கலின் ஷூ லேஸை கட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் “ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்” இதுதான் என்று கூறி ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

பெங்களூர் அணியை சேர்ந்த இளம் வீரர்கள் இந்த தொடர் தொடங்கும் முன் கோவிட் காரணமாக பாதிக்கப்பட்டு அணிக்கு திரும்பி தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நேற்று அடித்த செஞ்சுரி தான் ஐபிஎல் தொடரில் அவரது முதலாவது செஞ்சுரி அதுமட்டுமின்றி அன் கேப்டு வீரராக அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் நேற்று படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement