தோனி செய்வதை வேடிக்கை மட்டும் பாருங்கள் கிரிக்கெட்டில் பல விடையங்களை கற்று கொள்ளலாம் – இங்கிலாந்து வீரர் வியப்பு

Buttler
- Advertisement -

தோனி இந்திய அணிக்காக 2004 ஆம் ஆண்டிலிருந்து ஆடிவருகிறார். தற்போது வரை 15 ஆண்டுகள் ஆகிறது. தற்போது ஓய்வில் இருந்தாலும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 2007 ஆம் ஆண்டு இவர் கேப்டன் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல சாதனைகள் படைத்துள்ளார். விக்கெட் கீப்பிங், கேப்டன்ஷிப், பேட்டிங் என அனைத்திலும் இவர் தனது தடத்தினை பதித்து வரலாறு படைத்துள்ளார்.

dhoni

- Advertisement -

இரண்டு உலக கோப்பை, ஒரு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என ஐ.சி.சி யின் அனைத்து தொடர்களையும் வென்ற இவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த கேப்டனாக பார்க்கப்படுகிறார். மேலும் ஆட்டத்தின் போக்கை கவனிப்பதில் இவருக்கு ஈடு யாரும் இல்லை என பல வீரர்கள் கூறி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைக் ஹசி, கங்குலி, ஸ்மித் என பலரும் அவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விக்கெட் கீப்பிங்கில் நவீன காலத்தில் முன்னோடியான ஒரு வீரர் தோனி என்றும் கூறலாம். பல விக்கெட் கீப்பர்கள் இவர் செய்ததைப் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Buttler

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : முன்னாள் இந்திய வீரர் தோனியிடம் ஐபிஎல் தொடரின்போது பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். மைதானத்தில் நெருக்கடியான நேரத்தில் எவ்வாறு அமைதியாக இருந்து தீர்வை கண்டுபிடிக்க வேண்டுமென்று அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு வருகிறேன். அது ஒரு மிகவும் வியப்பான விஷயம்.

- Advertisement -

இந்த விஷயத்தில் அவர் அனைவருக்கும் உதாரணம் அவரை மைதானத்தில் பார்த்துக்கொண்டே இருந்தால் போதும் பல கிரிக்கெட் விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். அந்த அளவிற்கு ஒரு அபாரமான வீரர் அவர் என்று பாராட்டிப் புகழ்ந்து தள்ளியுள்ளார் ஜோஸ் பட்லர். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Buttler3

உலகின் பல்வேறு நாடுகளில் டி20 லீக்கில் விளையாடிவரும் பட்லர் ஐ.பி.எல் போட்டிகளை இந்திய வீரர்களும், ரசிகர்களும் எந்த அளவு நேசிக்கிறார்களோ அந்த அளவிற்கு தானும் நேசிப்பதாகவும் தற்போது ஐ.பி.எல் தொடரில் விளையாடாமல் இருப்பதால் தானும் வருத்தத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement